பெரிய பெரிய கஷ்டங்கள் வராமல் இருக்கணும்னா, இந்த சின்ன சின்ன தவறுகளை வாழ்நாள் முழுக்க செய்யாம இருங்க!

vishnu-pournami

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட, நமக்கு தோஷத்தை ஏற்படுத்தி விடலாம் என்று சொல்கிறது சாஸ்திரம். இந்த பதிவில் குறிப்பிட போகும் குறிப்புகள் எல்லாம், சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு இந்த சாஸ்திர முறைகள் தெரிந்திருந்தாலும், தெரியவில்லை என்றாலும் சரி. இந்த தவறுகளை இனிமேல் உங்களுடைய வாழ்க்கையில் செய்யவே கூடாது. அப்படி மீறி செய்யும் பட்சத்தில், உங்களுக்கு ஏற்படப் போகும் கஷ்டங்களும், கட்டாயம் ஏற்படும் என்பது உறுதி. இந்த தவறுகளை செய்யக்கூடாது என்று சொல்கிறது சாஸ்திரம். அது என்னென்ன தவறுகள் தெரிந்து கொள்ளலாமா?

hair cutting

அமாவாசை பௌர்ணமி தினத்தன்று முடி வெட்டக்கூடாது. ஷேவிங் பண்ணிக் கொள்ளக்கூடாது. நகம் வெட்ட கூடாது. கட்டாயம் தாய் தந்தை இல்லாதவர்கள் கூட தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. குறிப்பாக நிறைய பேருடைய வீட்டில், தங்களுடைய குழந்தைகளுக்கு அமாவாசை தினத்தன்று எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பாட்டி விடுகிறார்கள். பெற்றோர்கள், முடிந்தவரை உங்களுடைய குழந்தைகளுக்கு அமாவாசை தினத்தன்று தலைக்கு குளிக்க வைக்காமல், இருப்பதே மிகவும் சிறந்தது. மேல் மட்டும் குளித்துக் கொள்ளலாம். இது பித்ரு தோஷம், பித்ரு சாபம் உண்டாக ஒரு காரணமாக இருக்கும் என்று  குறிப்பிடப்படுகிறது. இந்த அமாவாசை திதியில் மட்டுமாவது குளிக்காமல் எதையும் சாப்பிடாதீர்கள்.

பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் நல்லது. ஆனால், பிரதோஷ தினத்திலேயே வில்வ மரத்தில் இருந்து வில்வ இலையை தயவு செய்து யாரும் இனி பறிக்காதீர்கள். அது பெரிய பாவச் செயலாக சொல்லப்பட்டுள்ளது.

vilvam

உங்களுடைய வீட்டில் மருதாணி செடி இருந்தாலும், தோட்டத்தில் மருதாணி செடி இருந்தாலும், அல்லது வேறு எந்த இடத்தில் மருதாணி செடி இருந்தாலும் வெள்ளிக்கிழமை அன்று அந்த மருதாணி செடியிலிருந்து இலைகளை பறிக்கக் கூடாது. மகாலட்சுமி நம்மிடம் தங்காமல் போவதற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது, வெள்ளிக்கிழமை அன்று மருதாணி இலைகளை பறித்து மற்றவர்களுக்குக் கொடுக்க கூடாது என்பதை நாம் எல்லோருக்கும் தெரியும். மருதாணி இலையை, வெள்ளிக்கிழமை அன்று, உங்களுடைய தேவைக்காக கூட, செடிகளில் இருந்து பறிக்க கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். முடிந்த வரை எந்த மரத்திலிருந்தும் வெள்ளி, செவ்வாயில் இலைகளை பறிக்க வேண்டாம்.

- Advertisement -

கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு சிறந்த நாட்களாக எத்தனையோ இருக்கிறது. ஆனால், கடனை ஏகாதேசி அன்று மட்டும் கட்டாயம் வாங்கி விடாதீர்கள். அது ஒரு மிகப் பெரிய தவறாக சொல்லப்பட்டுள்ளது. கடனை திருப்பிக் கொடுப்பதில் ஏகப்பட்ட கஷ்டம் ஏற்பட்டு விடும். இதனால் கடனை வாங்க போகும் அன்று ஏகாதசி திதி இருக்கின்றதா என்பதை ஒருமுறை நாள்காட்டியில் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கே தெரியாமல் கூட ஏகாதேசி அன்று கடனை கட்டாயம் வாங்க கூடாது.

calendar

இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வதற்காக நாம் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருக்கின்றோம். அப்படி செல்லும் பட்சத்தில் அந்த கோவிலுக்கும் புரோகிதரையோ அல்லது பூசாரியையோ நீங்கள் தொட்டுப் பேசக்கூடாது. அவர் உங்களுக்கு தேவையான பூஜைகளை சரிவர செய்யவில்லை என்றாலும், அந்த இடத்தில் அவர்களை திட்டுவது உங்களுக்கு தோஷத்தை ஏற்படுத்திவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் கோவிலை விட்டு வெளியே வந்த பிறகு சாதாரண மனிதர்தான். கோவிலுக்குள் இருக்கும் வரை, அவர் இறைவனுக்கு சேவகம் செய்பவராகத் தான் பார்க்க வேண்டும். இப்படியாக நீங்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகளில் மேற்குறிப்பிட்ட உள்ள சில தவறுகளும் அடங்கி இருப்பதால் இனி அதை மாற்றிக்கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
எந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி சென்றால் யோகம் வரும். எந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி செல்லக் கூடாது!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Aanmeega thagaval Tamil tips. Aanmeega pariharangal. Aanmeega ragasiyam. Aanmeega seithigal in Tamil. Aanmeega thagaval in Tamil.