எந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி சென்றால் யோகம் வரும். எந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி செல்லக் கூடாது!

perumal
- Advertisement -

திருப்பதி என்று சொன்னாலே நம் நினைவிற்கு முதலில் வருவது லட்டு. அதன் பின்பு, அங்கு இருக்கும் பக்தர்களின் கூட்டம். ‘திருப்பதிக்கு சென்றால் திருப்பம் ஏற்படும்’ என்ற இந்த வாசகத்தை நம்மால் நிச்சயம் மறுக்க முடியாது. பக்தர்களுக்கு பெருமாள், வேண்டிய வரத்தை வேண்டிய உடனே கொடுக்கும் கலியுக தெய்வமாக தான் காட்சி தருகின்றார். எந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு சென்று வந்தால் யோகம் கிடைக்கும் என்பதைப் பற்றியும், திருப்பதியில் பெருமாளை தரிசனம் செய்ய அதிக நேரம் காத்திருப்பதற்கான காரணம் என்ன? என்பதைப் பற்றியும், திருப்பதி மட்டும் எப்போதுமே, செல்வ செழிப்போடு இருப்பதற்கு காரணம் என்ன? என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Perumal

பொதுவாகவே ஒருவருடைய ஜாதக கட்டத்தில் சந்திரன் சரியான இடத்தில் அமைந்து விட்டால், அவர் கட்டாயம் யோககாரனாகத்தான் இருக்க முடியும். நம்முடைய இந்திய நாட்டில், சந்திரனின் தாக்கம் அதிகமாக இருக்கும் பகுதி திருப்பதி மலை தான். அதாவது சந்திரனின் ஒளிக்கதிர்கள் அதிகமாகப் படும் இடம் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால்தான் இங்கு செல்வவளம் எப்போதும் நிறைந்திருக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் இந்த இடத்தில், ஸ்ரீ ராமானுஜரின் எந்திர சக்கரங்கள் பாதிக்கப்பட்டிருப்பதும் ஒரு காரணம். இந்த கோவிலுக்கு சென்று வந்தால், நமக்கு இருக்கும் ஜாதக தோஷமாக இருந்தாலும் சரி, செய்வினை தோஷமாக இருந்தாலும் சரி, புத்திரதோஷமாக இருந்தாலும் சரி, அதற்கான விரைவான தீர்வு கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Perumal

வாஸ்து படி ஒரு இடத்தில் வடகிழக்கு மூளையானது பள்ளமாகவும், தெற்குப் பகுதி உயரமாகவும் இருந்தால் அந்த இடம் பிரபலமடைந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. திருப்பதியில் வடகிழக்கில் அருவி பள்ளத்தாக்கும், தெற்கில் மலைப்பகுதியும் இயற்கையாகவே அமைந்து உள்ளதால், சொல்லவே தேவையில்லை. செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டி, பேர் புகழோடு உச்சியில் நிற்கின்றது. இதுவும் ஒரு காரணம்.

- Advertisement -

பிரபஞ்சத்தின் சக்தி நேரடியாக இந்த மலையில் அதிகம் ஈர்க்கப்படுவதால், அங்கு செல்லும் பக்தர்களின் மனது நேர்மறையாக சிந்திக்க தொடங்கிவிடுகிறது. தன்னம்பிக்கை தானாக அதிகரித்து விடுகிறது. மனக்குழப்பம் தீர்ந்து விடுகிறது. அதே மனநிலையில் நாம் வீடு திரும்பும் போது, அந்த சூழ்நிலையில் எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது நமக்கு வெற்றியைத் தேடித் தந்து விடுகிறது.

perumal

குறிப்பாக திருப்பதிக்கு நடைபாதை யாக நடந்து செல்பவர்கள், மேல்நோக்கி தலைநிமிர்ந்து நடந்து செல்வதால் நம் உடலில் இருக்கும் மூலாதார சக்கரங்கள் சீராக இயங்க தொடங்குகின்றது. தோல் பிரச்சனை உள்ளவர்களும், சந்திரபுத்தி உள்ளவர்களும், திருப்பதி மலைமேல் நடந்தே செல்வது மிகவும் நல்லது. குறிப்பாக திங்கட்கிழமை அன்று திருப்பதிக்குச் சென்று தங்கினால், அதிகப்படியான பலனை நம்மால் அடையமுடியும்.

திருப்பதிக்கு சென்றால், அந்த மலையின் மேல் பத்து மணி நேரத்திற்கு மேல் இருந்து தரிசனம் செய்வது பக்தர்களுக்கு நல்ல பலனைப் பெற்றுத் தரும் என்ற ஒரு சாத்திரம் உள்ளது. இதனால் தான் பக்தர்களை, ஒரு இடத்தில் வைத்து, பல மணி நேரங்கள் கழித்து பெருமாளை தரிசனம் செய்வதற்காக அனுப்பி வைக்கிறார்கள். பெருமாளை தரிசனம் செய்வதற்காக காத்திருக்கும் அந்த சமயத்தில், பெருமாளை மனதார நினைத்து, அந்த புண்ணிய பூமியில் தியானம் செய்வது, நமக்கு பல கோடி புண்ணியத்தை தேடித்தரும். இது நம்மில் பல பேருக்கு புரிவதே கிடையாது. திருப்பதிக்கு சென்றால் அந்த குடோனில் போட்டு அடைத்து விடுகிறார்கள் என்று திட்டிக் கொண்டே இருப்பவர்கள் ஏராளம். இனியாவது திருப்பதிக்குச் சென்றால், அந்த புண்ணிய இடத்தில் மனதை அமைதியாக வைத்து தியானம் செய்ய பழகிக் கொள்ளுங்கள்.

Perumal

குறிப்பாக மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், மீனம், இந்த லக்னத்தை கொண்டவர்கள் பெருமாளை எப்போது வேண்டும் என்றாலும் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்யலாம். எப்போதெல்லாம் திருப்பதிக்குச் சென்று வருகிறீர்களோ, அப்போதெல்லாம்  நிச்சயம் அவர்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் காத்திருக்கும். சிம்மம், தனுசு, கும்பம் இந்த மூன்று லக்னத்தை கொண்ட ராசிக்காரர்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பெருமாளை சென்று தரிசனம் செய்தால் போதுமானது.

- Advertisement -