பெண்கள் தங்களுடைய தலையில் சூடிக்கொள்ளும் பூக்களுக்கும், நாம் கோவிலுக்கு வாங்கி செல்லக்கூடிய பூக்களுக்கும் இத்தனை சாஸ்திரங்களா?

சுமங்கலிப் பெண்களாக இருந்தால் தலையில் எப்போதும் சிறிதளவு பூ வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள். பெண்கள் எப்போதும் மஞ்சள், குங்குமத்துடன் பூவையும் சூடிக்கொண்டு மங்களகரமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வழக்கம் பழங்காலத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தங்கள் தலைகளில் பூக்களை சூடிக்கொள்ளும் சுமங்கலி பெண்களாக இருந்தாலும் சரி, சிறிய வயது பெண்களாக இருந்தாலும் சரி. இந்த தவறை கட்டாயமாக செய்யக்கூடாது என்று நம்முடைய சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அது என்ன தவறு.

pengal-poo

பெண்கள் காலை வேளையில் தலைசீவி தங்கள் தலைகயில் பூக்களை சூடி கொள்வார்கள். சில சமயம் மாலை நேரத்திற்குள் அந்த பூ வாடி இருக்கும். சிலசமயம் வாடி இருக்காது. குளிர்காலமாக இருந்தால் கட்டாயம் வாடாது. வெயில் காலங்களில் சீக்கிரமாக வாடிவிடும். இது இயற்கைதான். சில பேருக்கு உடல் சூட்டின் காரணமாக தலையில் வைத்து சற்று நேரத்திலேயே பூ வாடி விடும். பூ வாடினால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் காலை வேளையில் நம் தலையில் வைத்த பூ, மாலையில் வாடாமல் இருந்தால், அதை நம் தலையில் இருந்து எடுத்து வீசக் கூடாது. மாலையில் ஒரு முறை தலை சீவி விட்டு அதே பூக்களைச் சூடிக் கொள்வது நல்லது. வாடாத பூக்களை தூக்கி வீசுவது பெண்களுக்கு பாவத்தைப் தேடித்தரும் என்று நம் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

உங்களுடைய வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருந்தால், அவர்களுக்கு நீங்கள் பூக்களை தருவது வழக்கமாக இருக்கும். உங்கள் கையில் இருக்கும் பூக்களை சமமாக பிரித்து விட்டு, மற்றவர்களுக்கு நீங்கள் பூக்களை கொடுப்பதற்கு முன்பு, ‘கட்டாயம் நீங்கள், உங்கள் தலையில் பூக்களை சூடி கொண்டுதான்’ அடுத்தவர்களுக்கு தரவேண்டும். பெண்கள் இதுவரை இந்த தவறுகளை அறியாமல் செய்திருந்தால் இனி திருத்திக் கொள்ளுங்கள்.

pengal-poo2

இரண்டாவதாக, கோவிலில் இறைவனுக்கு பூக்களை நாம் வாங்கி செல்லும் போது சின்ன தவறுகளை செய்கின்றோம். அந்த தவறை திருத்திக் கொள்வது நல்லது. அது என்ன தவறு? நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா?  கடையிலிருந்து இறைவனுக்கு நீங்கள் பூக்களை வாங்கி எடுத்துச் செல்வதாக இருந்தாலும், வீட்டில் இருந்து பூக்களை எடுத்து செல்வதாக இருந்தாலும், கவரில் போட்டோ அல்லது பையில் போட்டு எடுத்துச் செல்வீர்கள். கோவிலுக்கு சென்றுவிட்டு சுவாமிக்கு அந்த பூக்களை கவரோடு தரக்கூடாது.

- Advertisement -

கவரில் இருக்கும் பூக்களை எடுத்து உங்களது, உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள், உள்ளங் கைகளில் இருக்கும் பூக்களை அர்ச்சகர் எடுத்துக் கொள்ள வேண்டும். தவிர எந்த சூழ்நிலையிலும் நாம் கடவுளுக்கு எதையும் கொடுப்பதில்லை. அதாவது நாம் கடவுளுக்கு கொடுக்கும் இடத்தில் இல்லை. கடவுள் தான் நமக்கு கொடுக்கும் இடத்தில் இருக்கின்றார், என்பதை உணர்த்துவதற்காக தான் இந்த முறை. இப்படி இறைவனுக்காக நீங்கள் பூக்களைக் கொடுக்கும் போது உங்கள் மனதார, சுயநலமில்லாத வேண்டுதலை வைப்பது நல்ல பலனைத் தரும்.

nagalinga-poo

கடவுளுக்குத் தெரியாதா? யாருக்கு, எப்போது, எதைக் கொடுக்க வேண்டும் என்று. வரத்தை கேட்டவுடன் கொடுத்து விடுவாரா? கேட்காமல் இருந்தால், கொடுக்காமல் விட்டு விடுவாரா? எப்போதும் இந்த சிந்தனையை, மனதில் வைத்துக்கொண்டு எந்த சூழ்நிலையிலும், ‘அடுத்தவருக்கு உதவும் மனப்பக்குவத்தை உடைய ஒவ்வொரு மனிதனுமே கடவுளுக்கு இணையானவர்கள் தான்’ என்பதை மறக்காமல் வேண்டுதலை வையுங்கள்.

இதையும் படிக்கலாமே
கொரானாவிலிருந்து உங்களை, நீங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா? ஆன்மீகம் என்ன சொல்லுகிறது என்பதை தெரிந்து கொள்வோமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pengal Tamil. Sastram in Tamil. Flower astrology. Pengal seiya vendiyavai Tamil.