கொரானாவிலிருந்து உங்களை, நீங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா? ஆன்மீகம் என்ன சொல்லுகிறது என்பதை தெரிந்து கொள்வோமா?

corona-bairavar

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானா இன்று நம் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசாங்க அதிகாரிகள், இவர்களுடைய அறிவுரையோடு சேர்த்து, நம் ஆன்மீகத்தில் கூறப்பட்டிருக்கும் சில வழிபாட்டு முறைகளையும், யோகாவையும் பின்பற்றுவதன் மூலம், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த நாளில், இந்த தினத்தில், கொடிய வைரஸ் நம்மை தாக்கும் என்று, ‘தமிழ் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டது எந்த அளவிற்கு உண்மையோ’ அதே அளவிற்கு உண்மையான வழிபாட்டு முறைகள் தான் ஆன்மீகத்தில் கூறப்பட்டிருக்கும். ஆன்மீகத்தில் சொல்லப்படும் எந்த ஒரு வழிபாட்டு முறைகளும் கட்டாயமாக பொய்யாகாது. ஆன்மீக ரீதியாக ஒரு மனிதன் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

corona

ஒரு இடத்தில் தீமை அதிகமாக நடப்பதற்கு காரணமாக இருப்பவர் ராகுபகவான் தான் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. இதன்படி நம்முடைய நாட்டில் இன்று நடந்து கொண்டிருக்கும் இந்த அழிவினை தடுத்துநிறுத்த, தீர்வாக கால பைரவரை வழிபடுவது நல்ல பலனைத்தரும். எப்படிப்பட்ட கண்ணுக்கு தெரியாத பிரச்சனைகளையும் கால பைரவர் வழிபாடு சரி செய்து விடும் என்பது தான் சாஸ்திரம். கண்ணுக்குத் தெரியாத இந்த கொரானாவிடம் இருந்து, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் ‘ஓம் கால பைரவய நமஹ’ என்ற மந்திரத்தை மனதார உச்சரித்துக் கொண்டிருப்பது நல்ல பலனைத் தரும்.

தினம் தோறும் காலை எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்வது நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதோடு சேர்த்து யோகாசனத்தில் சொல்லப்படும் ‘சின் முத்திரை’ நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய முத்திரையாக யோகாவில் சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்த கொரானா வைரஸானது 60 வயதுக்கு மேற்பட்டவர்களை தாக்குவதாக சொல்லப்பட்டு வருகிறது. வயது முதிர்ந்தவர்கள் கூட இந்த சின் முத்திரையை வைத்து, மூச்சுப் பயிற்சி செய்வதன்மூலம் இந்த கொடிய வைரஸில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். ஆள்காட்டி விரலாலான குருவும், கட்டை விரலான சுக்கிரனும் இணையும் போது, நம் உடலில் இருக்கும் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ஆரோக்கியம் மேம்படும் என்பது தான் இதன் பொருள்.

bairavar

எப்படிப்பட்ட பெரிய வியாதிக்கும் தீர்வாக, துர்க்கை அம்மன் வழிபாடு சொல்லப்படுகிறது. அவரவர் வீட்டு வாசலில் மஞ்சள் தண்ணீர் தெளித்து வேப்பிலை கட்டுவதில் இருந்தும், இந்த கொடிய வைரஸிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

நம் நாட்டை விட்டு இந்த கண்ணுக்கு தெரியாத வைரஸை முழுமையாக அகற்ற வேண்டும் என்றால், நம்முடைய அரசாங்கத்திற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் கட்டாயம் தேவை. அரசாங்க ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை என்பதை மறந்து விடாதீர்கள். நமக்கு பாதிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தால், முதலில் அதை அரசாங்கத்திடம் தெரிவிப்பதே மிகச் சிறந்த வழி. எக்காரணத்தைக் கொண்டும் மறைத்துவிட வேண்டாம். பிரச்சனை அடுத்தவர்களையும் தொற்றிக்கொள்ளும் என்பதை மறந்து விடாதீர்கள். நம் தேசம். நம் நாடு. நம் மக்கள். விழிப்புணர்வுடன் இருந்து கொடிய கொரானாவிலிருந்து நம் தேசத்தை மீட்டெடுப்போம்.

இதையும் படிக்கலாமே
கண்ணுக்குத் தெரியாத இந்த சின்னப் பானை, உங்கள் கண்ணுக்கு புலப்படாத, பெரிய பிரச்சனைகளை கூட தீர்த்து வைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Corona prevention. Corona virus in Tamil. Coronavirus in india. Panchangam corona