என்னுடைய மகனுக்கு பிடித்த இந்திய வீரர் சச்சின்,கோலி,தோனி என்று யாருமில்லை. இவரைத்தான் பிடிக்கும் – தவான்

dhawan

இந்திய அணி தற்போது நியூசிலாந்து நாட்டில் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்நிலையில், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ஷிகார் தவான் தனது மகனுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் என் மகனுக்கு என்னையும், சச்சின், கோலி, தோனி போன்ற கிரிக்கெட் வீரர்களை பிடிக்காது.

அவனுக்கு பிடித்த வீரர் என்றால் அது இந்திய மகளிர் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ். என் மகனுக்கு அவர்களின் ஆட்டம் பிடிக்கும். மேலும், அவன் நேரில் அவர்களை சந்தித்து விளையாடியும் உள்ளான். அப்போது மித்தாலியிடம் நீங்கள் தான் எனக்கு பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் என்றும் அவன் கூறினான்.

அப்போதுதான் நான் என் மகனின் கிரிக்கெட் மீதான ஈர்ப்பை கண்டேன். அவனுக்கு கிரிக்கெட் பார்ப்பதை காட்டிலும் அதில் யார் சிறப்பாக விளையாடுகிறார் என்றும் பார்க்கிறான். மேலும், இப்போது அவனுக்கு கிரிக்கெட்டினை பகுத்தறியும் பழக்கம் வந்துள்ளதாக நான் நினைக்கிறன் என்று பதிவிட்டிருந்தார் தவான்.

இதையும் படிக்கலாமே :

அவர் இந்திய அணியில் விளையாட தகுதி உள்ளவர். தொடர்ந்து டக் அவுட் ஆவதால் அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம். அவர் கிறிஸ் கெயில்-க்கு சமமானவர் – டிராவிட்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்