சமையலறை மேடையில் இப்படி வெள்ளை நிறத்தில் உப்பு கறை படிந்திருக்கும். வாஷ்பேஷன் மற்றும் தண்ணீர் வரக்கூடிய டேப் இவைகளின் மேலும் உப்புக்கறை படிந்திருக்கும். பொதுவாகவே இந்த கறையை நீக்குவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. இந்த கறையை நீக்குவதற்கு நாம் நிறைய குறிப்புகளை நிறைய விதங்களில் பின்பற்றுவோம். இன்று நாம் பார்க்கக் கூடிய இந்த குறிப்பும் நிச்சயம் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும். அதுவும் நிறைய செலவு இல்லாத ஒரு குறிப்பு இது.
நம் குப்பையில் தூக்கிப் போடும் ஷாம்பு கவரை தாங்க இந்த குறிப்புக்கு பயன்படுத்த போகின்றோம். கவருக்கு உள்ளே இருக்கக்கூடிய ஷாம்புவை என்னதான் அழுத்தி வெளியே எடுத்தாலும் கூட, அந்த கவரை வெட்டிய பின்பு உள்பக்கம் லேசாக ஷாம்பு ஒட்டி இருக்கத்தான் செய்யும். ஷாம்பு கவரை வெட்டிவிட்டு அதன் உள்பக்கத்தை, இப்படி உப்பு கறை படிந்த இடத்தில் போட்டு தேய்க்கப் போகின்றோம். அவ்வளவுதான். (எங்க வீட்டு ஷாம்பு கவர் உள்ள ஷாம்பு இல்லைன்னு கவலைப்படாதீங்க. பாட்டிலில் இருக்கும் ஷாம்புவில் இருந்து கூட 1 ஸ்பூன் ஷாம்பூ எடுத்து சுத்தம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.) ஆனால் இதில் சில ட்ரிக் இருக்கிறது அதையும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
முதலில் உப்பு கறை படிந்த இடத்தை நன்றாக ஈரம் இல்லாமல் காய வைத்து விடுங்கள். ஒரு காட்டன் துணியை போட்டு சுத்தமாக ஈரத்தை துடைத்தால் இரண்டு நிமிடத்தில் சமையல் மேடை காய்ந்து விடும். காய்ந்த சமையல் மேடையில், இப்படி வெள்ளையாக பூத்திருக்கும் இடத்தில் முதலில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து எல்லா இடங்களிலும் படும்படி தேய்த்து விட்டு ஊற விடுங்கள்.
எலுமிச்சைச்சாறு ஐந்து நிமிடம் வரை அப்படியே ஊறட்டும். அதன் பின்பு ஒரு ஸ்டீல் நாரை வைத்து தேய்த்தால் வெள்ளை நிறத்தில் முதல் பாக உப்பு கரை நீங்கிவிடும். மீண்டும் அதே இடத்தில், இந்த ஷாம்புக் கவரை போட்டு நன்றாக தேய்க்க வேண்டும். இல்லையா ஒரு ஸ்பூன் ஷாம்புவை ஊற்றி ஒரு ஸ்டீல் நாரை கொண்டு தேய்ங்க வெள்ளை நிறத்தில் உப்பு கறை சுலபமாக நீங்கி வந்துவிடும்.
ரொம்பவும் விடாப்பிடியான கறை மேடையின் மூளை முடுக்குகளில் எல்லாம் ஒட்டி இருக்கும். ஷாம்பு எலுமிச்சம் பழம் போட்டு தேய்த்தும் நிச்சயம் அந்த கறை நீங்கி இருக்காது. வெள்ளை நிறத்தில் இருக்கும் அந்த இடத்தில் மட்டும் உப்பு காகிதத்தை போட்டு தேய்க்க வேண்டும். (முதலில் எலுமிச்சை பழச்சாறு போட்டு ஊறவைத்து, பிறகு ஷாம்பு போட்டு தேய்த்து கழுவி, பிறகு உப்பு காகிதத்தை போட்டு தேயுங்கள்.) சுலபமாக விடாப்படியான உப்பு கறை கூட நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
இதே போலத்தான் ஷாம்பூ போட்டு ஸ்டீல் குழாய்களை தேய்த்தாலும் அதில் இருக்கும் உப்பு கறை சுலபமாக நீங்கிவிடும். ஸ்டீல் டேப்க்கு மேலே கொஞ்சம் ஷாம்புவை போட்டு தேய்க்கும் போது நன்றாக நுரை வரும். அதை அப்படியே இரண்டு நிமிடங்கள் விட்டுவிட்டு, பின்பு ஒரு ஸ்டீல் நாரை வைத்து அந்த டேப்பை சுத்தம் செய்தாலே போதும் உங்களுடைய டேப் பளபளப்பாக மாறிவிடும். இது ரொம்ப ரொம்ப ஈஸியா டிப்ஸ் தான். ட்ரை பண்ணி பாருங்க நிச்சயமா உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.