ஷீரடி வாழும் சத்குரு நாதா – சாய் பாபா பாடல்

sai baba song tamil

ஷீரடி வாழும் சத்குரு நாதா என தொடங்கும் சாய் பாபா பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. கணேஷ் சுந்தரேசன் எழுதிய இந்த பாடலிற்கு வீரமணி கண்ணன் இசை அமைத்துள்ளார். இந்த பாடலோடு சேர்த்து சாய் பாபா புரிந்த அற்புதங்கள் குறித்த விடியோவும் இதில் இடம் பெறுகிறது. இந்த பாடலும் அதற்கான வரிகளும் இதோ.

சாய் பாபா பாடல் வரிகள்:
பாபா.. சாயி பாபா ஷீரடி வாழும் சாயி பாபா..
ஷீரடி வாழும் சத்குரு நாதா
சீரடி தொழுதேன் சிவகுறு நாதா
நாளும் பொழுதும் நலமாய் வாழ
அருள்வாய் பகவானே

சீரடி பாபவே….
சீரடி பாபவே.. ஞான ரூபனே
தவ யோகா நாதனே
பாதம் என்பது கங்கை நதி
மூழ்கிட மாறிடும் ஜென்ம விதி
உடலும் பொருளும் அர்ப்பணம் செய்தேன் சாயி பாபாவே..

தாமரை பதமோ, உனது முகம்
மல்லிகை மென்மையோ
ஆயிரம் ஆயிரம் பூக்கள் மணக்கும்
மலரின் மன்னவனோ
பாபா நீயே மலரானாய்
மனமெனும் பூவை சமர்ப்பனமாய்
அடிமலர் வைத்தே அண்டி இருந்தேன் சாயி பாபாவே..
மலரினை போல மலர்ச்சி தந்து
திருவடி சேர்ப்பாய் பாபாவே

தங்கமோ வெள்ளியோ
ஒளி உமிழும் வைர வைடூரியமோ
மரகத முத்து நீளம் கலந்த
மாணிக்க மணிமகுடா
சீரடி வாழும் பொற்குடமே
நவமணி உயிரை சமர்ப்பனமாய்
செம்பவளத்திரு அடி நிழல் வைத்தேன் சத்குரு பாபாவே
பொன்மணிகரமாய் எனை சுமந்தே
ஓங்கிட வைப்பாய் சாய் பாபா

இந்த பாடலையும் பார்க்கலாமே:
நண்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை – சாய் பாபா பாடல்

இது போன்ற மேலும் பல சாய் பாபா பாடல்கள், சாய் பாபா பாடல் வரிகள், சாய் பாபா கதைகள், அற்புதங்கள் என பலவற்றை அறிய தெய்வீகம் பக்கத்தை லைக் செய்யுங்கள்.