உங்கள் தொழில், வியாபாரங்களில் பன்மடங்கு லாபங்கள் ஈட்ட இதை செய்யுங்கள்

shiva
- Advertisement -

நமது முன்னோர்கள் கண்டுபிடித்த ஒவ்வொரு சடங்கு மற்றும் சம்பிரதாயங்களில் பலவிதமான நன்மைகள் இருக்கும். அப்படி அவர்களால் விஞ்ஞானபூர்வமாக அணுகி உருவாக்கப்பட்ட ஒரு சடங்கு முறை தான் ஹோமம் பூஜை முறையாகும். பழங்காலத்தில் இந்த ஹோம பூஜை சடங்குகள் மக்களின் நலனுக்காகவே செய்யப்பட்டன. ஹோமங்களில் பல வகைகள் உள்ளன அதில் “சிவ பஞ்சாக்ஷர ஹோமம்” செய்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

siva-thandavam

சிவ பஞ்சாக்ஷர ஹோமத்தை செய்வதற்கு ஹோம பூஜைகள் செய்வதில் அனுபவம் பெற்ற வேதியர்களிடம் ஒரு நல்ல நாளை குறித்து கொள்ள வேண்டும். உங்கள் பிறந்த நட்சத்திர தினம் அல்லது சிவபெருமானுக்குரிய மகா சிவராத்திரி, பிரதோஷம் போன்ற தினங்களில் இந்த ஹோமத்தை செய்வது மிகவும் சிறப்பானது. இந்த ஹோம பூஜை செய்வதற்கு அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரமே சிறந்த நேரமாக இருக்கிறது. இந்த பூஜையில் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்வது நல்லது. அப்படி செய்வதால் அனைவருக்கும் வாழ்வில் அற்புதமான பலன்கள் உண்டாகும்.

- Advertisement -

அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சிவபெருமானின் சக்தி வாய்ந்த சிவ பஞ்சாக்ஷர மந்திரங்களை ஜெபித்து இந்த ஹோமத்தை செய்வதால் உங்கள் வீடுகளில் இருக்கின்ற எதிர்மறை சக்திகள் அனைத்தும் நீங்கும். ஹோம பூஜை முடிந்த பிறகு ஹோம அஸ்தி மற்றும் பூஜை செய்யப்பட்ட கலசம், குங்குமம், சந்தனம் பிரசாதம் தரப்படும். அவற்றை உங்கள் பூஜையறையில் வைத்து தினமும் நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் நெற்றியில் திலகமிட்டு வர மிகுந்த நன்மைகள் ஏற்படும்.

Homam

சிவ பஞ்சாக்ஷர ஹோம பூஜை செய்வதால் உங்கள் குடும்பத்தில் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். உங்கள் வீட்டை அண்டி இருக்கும் துஷ்ட சக்திகள் நீங்கி, தரித்திரமும் வறுமை நிலையும் உங்களை என்றும் அண்டாமல் காக்கும். தொழில், வியாபாரங்களில் நஷ்டங்கள் ஏற்படாமல் தடுத்து லாபங்களை பன்மடங்கு பெருக்கும். செல்வம் பெருகும். புதியசொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். வாழ்வில் எப்போதும் கடன் வாங்காத ஒரு நிலையை ஏற்படுத்தும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
அஸ்வினி நட்சத்திர தோஷ பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Shiva panchakshara homam in Tamil. It is also called as Homam pooja benefits in Tamil or Homangal in Tamil or Sivaperuman valipadu in Tamil or Homa poojaigal in Tamil.

- Advertisement -