அஸ்வினி நட்சத்திர தோஷங்களை போக்கும் எளிய பரிகாரங்கள் இதோ

27 நட்சத்திரங்களில் முதலாவதாக வருவது அஸ்வினி நட்சத்திரம். அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தோஷம் நீங்க செய்யும் எளிய பரிகாரங்கள் இதோ

aswini

ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்படப்படும் விண்ணில் இருக்கும் 27 நட்சத்திரங்களில் முதலாவதாக வருவது அஸ்வினி நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரங்களில் பிறக்கும் போது நட்சத்திரத்தின் நட்சத்திர பாதங்கள் காரணமாக சிலருக்கு தோஷங்கள் ஏற்படுகிறது. அப்படி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோஷங்கள் நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

aswini devathas

அஸ்வினி நட்சத்திரம் நவகிரகங்களில் கேது பகவானுக்குரிய நட்சத்திரமாக இருக்கிறது. இந்த நட்சத்திரத்தின் தேவதைகளாக குதிரை முகம் கொண்ட அஸ்வினி தேவர்கள் இருக்கின்றனர். அஸ்வினி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்த குழந்தைகளால் அவர்களின் தந்தைக்கு தோஷம் ஏற்பட்டு மூன்று மாதங்கள் வரை பொருள் ரீதியான கஷ்டங்களை உருவாக்கும். மற்ற மூன்று பாதங்களில் பிறந்தவர்களுக்கு சிறிய அளவில் தோஷங்கள் உண்டு.

இந்த தோஷங்கள் அனைத்தும் நீங்க உங்கள் சக்திக்கேற்ப வருடமொரு முறை வசதி குறைந்தவர்களுக்கு வஸ்திர தானம் செய்ய வேண்டும். அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் குதிரைகளுக்கு கொள்ளு தானியங்களை உணவாக தர வேண்டும். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதியாக கேது பகவான் இருப்பதால் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் கேது பகவானை வழிபட்டு வரவேண்டும். மருந்துகள் வாங்க வசதியற்ற ஏழைகளுக்கு மருந்துகளை வாங்கி தருவது சிறந்த பரிகாரமாகும்.

Goddess Saraswathi

அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய விருட்சமாக எட்டி மரம் இருக்கிறது. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நட்சத்திர தினத்தன்று எட்டி மரம் தலவிருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று அந்த எட்டி மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது, அந்த எட்டி மரத்திற்கு அடியில் அமர்ந்து தியானம் செய்வதாலும் அவர்களின் தோஷங்கள் நீங்கப் பெறும். தினந்தோறும் சரஸ்வதி தேவி மந்திரத்தை கூறி வழிபடுவது அவர்களுக்கு பல நன்மைகளை தரும். விநாயகரை வழிபடுவது உங்களுக்கு அனைத்து காரியங்களும் தடையின்றி முடியும்.

இதையும் படிக்கலாமே:
கேட்டை நட்சத்திர பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ashwini nakshatra dosha pariharam in Tamil. It is also called as Ashwini natchathiram in Tamil or Nakshatra pariharam in Tamil or Natchathira dosham pariharam in Tamil or Ashwini devargal in Tamil.