இன்று மகா சிவராத்திரி பூஜையை எத்தனை மணிக்கு செய்வது நல்லது

sivarathiri-poojai
- Advertisement -

“சிவ சிவ” என்று கூற தீவினைகள் அகலும் என்று தமிழ் சித்தரான திருமூலர் தனது திருமந்திரம் எனும் மகத்துவமிக்க நூலில் கூறியுள்ளார். மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் நன்மை தீமை கலந்த எண்ணங்கள், செயல்கள் கொண்டவர்களாகவே இருப்பார்கள். தங்களின் இத்தகைய வினைகளை களைய அனைவரும் வழிபடும் இறைவன் சிவபெருமான் ஆவார். அத்தகைய சிவபெருமானை மகா சிவராத்திரி தினத்தன்று எப்போது பூஜை செய்து வழிபட்டால் நன்மைகள் பெறலாம் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

siva

இந்திய நாடு மட்டுமல்லாமல் உலகமுழுவதுமுள்ள சிவனை வழிபடும் சைவர்கள் மிக சிறப்பாக கொண்டாடும் ஒரு ஆன்மீக சிறப்பு தினமாக மகாசிவராத்திரி தினம் இருக்கிறது. அந்த வகையில் இன்று பாரத நாடு முழுவதும் அனைத்து புகழ்மிக்க சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழாவுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன.

- Advertisement -

மகா சிவராத்திரியான இன்று அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜை, வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிகாலை முதலே சிவாலயங்கள் அனைத்திலும் பக்தர்கள் திரண்டு வழிபட்டு வருகின்றனர். பொதுவாக திங்கட்கிழமை என்பது சிவபெருமான் வழிபாட்டிற்குரிய நாள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வருடம் மகா சிவராத்திரியும் திங்கட்கிழமை வந்துள்ளதால் இந்த ஆண்டு சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. நமது பஞ்ஜாகத்தின் படி, சதுர்தசி திதியான இன்று (4 ஆம் தேதி) திங்கள் காலை 04:28 மணிக்கு தொடங்கி இன்று இரவு 07:07 மணிக்கு மகா சிவராத்திரி திதி முடிவடைகிறது.

sivan lingam

மகாசிவராத்திரி தினத்தில் சிவபெருமானுக்கு பூஜை செய்வதும், சிவ பூஜையில் கலந்து கொள்வதும் நன்மைகளை தரும். மகாசிவராத்திரி பூஜை செய்ய சிறந்த நேரம் “நிஷிகந்த் கால பூஜை” நேரமாகும். சிவபெருமான் பூமியில் தோன்றியதாகக் கருதப்படும் இந்த நேரத்தில் நிஷிகந்த் கால பூஜை செய்வது மிகவும் சிறப்பாகும்.

- Advertisement -

Sivan

இந்த ஆண்டு, நிசிதா கால் பூஜை நேரம் மார்ச் 04 அதிகாலை 12:08 முதல் மார்ச் 5 அதிகாலை 12:57 மணி வரை இருக்கும். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் மகா சிவராத்திரி பூஜை மேற்கொள்வதால் நீங்கள் விரும்பிய பலன்களை பெறலாம். மகாசிவராத்திரி தினத்தில் “நான்கு கால பூஜை” செய்து சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இன்றைய சிவராத்திரி தினத்திற்கான நான்கு கால பூஜை நேரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

llingam

மகா சிவராத்திரி 2019 நான்கு ஜாம அல்லது கால பூஜை நேரம்:

- Advertisement -

முதல் ஜாமம்= மார்ச் 04 அன்று மாலை 06:19 முதல் இரவு 09:26 மணி வரை

இரண்டாம் ஜாமம்= மார்ச் 04 அன்று இரவு 09:26 மணி முதல் மார்ச் 05 அதிகாலை 12:33 வரை

மூன்றாம் ஜாமம்= மார்ச் 05 அதிகாலை 12:33 முதல் காலை 3.39 மணி வரை

நான்காம் ஜாமம்= மார்ச் 05 காலை 3.39 மணி முதல் காலை 06.46 வரை.

இதையும் படிக்கலாமே:
பாத நட்சத்திர தோஷங்கள் தீர

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Shivaratri pooja timings 2019 in Tamil. It is also called as Shivaratri in Tamil or shivaratri poojai in Tamil or Maha shivratri in Tamil or Maha shivratri poojai in Tamil.

- Advertisement -