பாத நட்சத்திரங்களில் இறந்தவர்களால் ஏற்படும் தோஷம் நீங்க பரிகாரம் இதோ

padham-parigaram
- Advertisement -

பிறப்பு என்பது எப்படி இயற்கையானதோ அதே போல இறப்பு என்பதும் இயற்கையின் நியதியாகும். நாம் எங்கே எப்போது, எப்படி பிறக்கிறோம் என்பது எப்படி நாம் தீர்மானிப்பதில்லையோ அதே போன்று நாம் எங்கே எப்போது எப்படி இறப்போம் என்பதும் நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஒரு சிலர் கர்ம வினை காரணமாக சில குறிப்பிட்ட நட்சத்திரங்களின் தினத்தில் இறந்து விடுவதால், நட்சத்திர பாத தோஷம் ஏற்பட்டு, இறந்தவர்களின் வீட்டில் வசிப்பவர்கள் பல இன்னல்கள் அனுபவிக்க நேரிடுகிறது. இதற்கான எளிய பரிகாரங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

pitru worship

அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆறு மாத பாதம் கொண்ட நட்சத்திரங்கள் ஆகும். ரோகிணி நான்கு மாத பாதம் கொண்ட நட்சத்திரமாகவும், கார்த்திகை, உத்திரம் மூன்று மாத பாதம் கொண்ட நட்சத்திரமாகவும், மிருகசீரிடம், புனர்பூசம், சித்திரை, விசாகம், உத்திராடம் போன்ற நட்சத்திரங்கள் இரண்டு மாதம் பாதம் கொண்ட நட்சத்திரங்களாக இருக்கிறது.

- Advertisement -

இத்தகைய நட்சத்திரங்களில் இறந்தவர்களால் வீட்டில் வசிப்பவர்களுக்கு தோஷங்களும், கண்டங்களும் ஏற்படாமல் தடுக்க சில எளிய பரிகார வழிகளை பின்பற்ற வேண்டும். அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி போன்ற நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் இறந்த இடத்தை ஆறு மாதங்கள் மூடி வைக்க வேண்டும். ரோகிணி நட்சத்திரத்தில் இறந்தவர்கள் வீட்டில் உயிர் நீத்த இடத்தை நான்கு மாதங்கள் பூட்டி வைக்க வேண்டும். கார்த்திகை, உத்திரம் நட்சத்திரங்களில் இறந்தவர்கள் இறந்த இடத்தை மூன்று மாதங்கள் பூட்டி வைக்க வேண்டும்.

மிருகசீரிடம், புனர்பூசம், சித்திரை, விசாகம், உத்திராடம் போன்ற நட்சத்திரங்களில் இறந்தவர்களின் வீட்டில் அவர்கள் இறந்த இடம், அறை போன்றவற்றை இரண்டு மாதங்கள் பூட்டி வைக்க வேண்டும். மேலே கூறப்பட்ட நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் அவர்கள் இறந்த இடத்தில் ஒரு வெண்கல கிண்ணத்தில் நல்லெண்ணெய் வைத்து, இறந்த நட்சத்திரத்திற்க்கு சொல்லபட்ட பாத தோஷம் தீரும் காலம் வரை மாலையில் கற்பூரம் ஏற்ற வேண்டும். பாத தோஷ பரிகார காலம் முடிந்ததும் நல்லெண்ணெய் உடன் கூடிய வெண்கல கிண்ணத்தை கோவில் தெப்பக்குளம் தவிர்த்து கண்மாய், குளம் போன்றவற்றில் போட்டு விடுவதால் பாத நட்சத்திரத்தில் இறந்தவர்களின் பாத தோஷம் விலகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
வாழ்க்கை துணை கண்டங்கள் தடுக்கும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்தது கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Nakshatra dosha for death in Tamil. It is also called as Nakshatra pada dosha in Tamil or Death dosham pariharam in Tamil or Nakshatra dosha in Tamil.

- Advertisement -