மகா சிவராத்திரி அன்று எதை எல்லாம் செய்யவே கூடாது தெரியுமா ?

shiva-lingam
- Advertisement -

நமது உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றிற்கும் நன்மைகளை தருகிற ஒரு அற்புத விரத நாளாக இருக்கிறது மகா சிவராத்திரி தினம். பொதுவாக விரதம் என்றாலே எதுவும் சாப்பிடாமல் இருப்பது என்றே பலரும் அர்த்தம் கொள்கின்றனர். ஒவ்வொரு வகையான விரதத்தின் போதும் பல விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் சிவராத்திரி தினத்தில் விரதம் இருக்கும் போது எவற்றை செய்யலாம், எவற்றையெல்லாம் செய்ய கூடாது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

god siva

மகா சிவராத்திரி தினத்தன்று சிவ பெருமானுக்கு விரதம் இருக்க நினைப்பவர்கள் அன்றைய தினம் காலை, நண்பகல் மாலை எனும் மூன்று வேளையும் நன்கு குளித்து உடல் மற்றும் மன தூய்மை பேண வேண்டும். உடல் நிலை நன்கு இருப்பவர்கள் மூன்று வேளை உணவு உண்ணாமல் விரதம் இருக்கலாம். வயதானவர்கள், உடல் நலம் சரியில்லாதவர்கள் பால், பழம் அல்லது உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

- Advertisement -

சிவராத்திரி தினத்தில் சிவனை நமக்குள்ளாக கொண்டு வரும் வகையில் நமது செயல்களும், எண்ணங்களும் இருக்க வேண்டும். இரவு நேரம் விழித்திருக்க பகலில் உறங்க கூடாது. இத்தினத்தில் மாமிச, துரித உணவுகள் போன்றவற்றை உண்ண கூடாது. புகை பிடித்தல், புகையிலை மெல்லுதல் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும். மது அருந்துதல், பணம் கட்டி ஆடும் கேளிக்கை விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும்.

புனிதமான இந்த தினத்தில் பொய் பேசுதல், பிறரை திட்டுவது, அடிப்பது, தீய எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் சுக போகங்கள் அனுபவிப்பது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். மீறி இத்தகைய செயல்களை இந்த தினத்தில் செய்வதால் ஏற்கனவே நாம் செய்திருக்கின்ற பாவ தோஷங்கள் இந்த தினத்தில் நீங்குவதற்கு பதிலாக சிவபெருமானின் சாபத்தை பெற்று தந்துவிடும்.

- Advertisement -

triyambakeswarar lingam

இரவு முழுவதும் கண் விழித்திருக்க வேண்டும் என்பதற்காக சிலர் திரைப்படம் காண செல்லுதல், தொலைகாட்சி, கணினி மற்றும் இதர பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். நாளை காலை வரை கண் விழித்து சிவபெருமானை வழிபட்டு, முறையாக உடல் மற்றும் மன சுத்தி செய்து கொண்டு மீண்டும் சிவனை வழிபட்ட பிறகு, உணவு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். இந்த முறைப்படி சிவராத்திரி விரதம் இருப்பதால் சிவராத்திரி விரதத்தின் முழுமையான அருள் நமக்கு கிட்டும்.

இதையும் படிக்கலாமே:
கண்டங்களை தடுக்கும் பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Shivaratri vratham in Tamil. It is also called as Siva poojai vithigal in Tamil or Maha shivaratri valipadu in Tamil or Sivan valipadu murai in Tamil or Siva poojai murai in Tamil.

- Advertisement -