சோயிப் அக்தர் : அபிநந்தன் குறித்தும். இந்தியா பாகிஸ்தான் போர் குறித்தும் கருத்தினை பதிவிட்ட அக்தர்

Akhtar

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் புல்வாமா மாவட்டத்தில் ஏற்படுத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 44 ராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். அதற்கு பதிலடி தரும் விதமாக இந்திய விமானப்படை பால்கோட் பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாமை முழுமையாக அழித்தது.

Miraj-flight

இதனை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே பதட்டமான போர் சூழல் ஏற்பட்டது. பிறகு பாகிஸ்தான் நாட்டு விமானம் ஒன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவியதால் அதனை தடுக்க தமிழகத்தை சேர்ந்த அபிநந்தன் போர் விமானத்தில் விரட்டி சென்று பிறகு, பாகிஸ்தான் நாடு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். தற்போது அவர் இன்று இருநாட்டு சமாதான உடன்பாட்டின் அடிப்படையில் இந்தியாவிற்கு திரும்ப அனுப்படவுள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுளளார். அதில் : இந்தியாவின் விமானப்படை பைலட் அபிநந்தன் நாளை சுதந்திரமாக சமாதான அடிப்படையில் இந்தியாவிற்கு திரும்ப அனுப்பப்பட உள்ளார் என்று நாட்டின் பிரதமரான இம்ரான் கான் அறிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்றும் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வேண்டாம். அனைவரும் போர் வேண்டாம் என்று கூறுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

அக்தரின் இந்த பதிவு இந்தியாவின் மீது இருக்கும் அவரது பிணைப்பை காட்டுகிறது. மேலும், அவரது பதிவினை ரசிகர்களும் போர் வேண்டாம் என்று பதிலளித்து சமூக வலைத்தளங்களில் அதனை பகிர்ந்தும் வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

எம்.எஸ்.தோனி : முடிவுக்கு வருகிறது தல தோனியின் டி20 வாழ்க்கை. ஓய்வை பற்றிய அறிவிப்பு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : Shoaib akhtar tweet about indian pilot abhinandan