ஓவரின் 6 பந்துகளையும் யார்க்கர் வீசும் திறன் படைத்தவர் இந்த இந்திய அணி பந்துவீச்சாளர் மட்டுமே – வாசிம் அக்ரம்

akram

நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக கைப்பற்றி இந்திய அணி வரலாற்று வெற்றிபெற்றது. இந்த வெற்றியை இந்திய நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் நாடுகள் அனைத்தும் கொண்டாடியது .

koli

அந்த டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் புஜாரா, கோலி மற்றும் பண்ட் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டார்கள் என்றால் பந்துவீச்சில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் கலக்கினர். அதிலும் குறிப்பாக இளம் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா சிறப்பாக செயல்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்நிலையில் பும்ரா குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், வேகப்பந்து வீச்சு ஜாம்பவானுமான வாசிம் அக்ரம் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில்: உலகில் தற்போது உள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் இந்திய அணியின் பும்ராவால் மட்டுமே சரியாக ஒரு ஓவரின் 6 பந்துகளையும் யார்க்கர் வீசி எதிரணியை திணறடிக்கமுடியும்.

bumrah

இவரின் பங்களிப்பு வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பெரும் பலத்தினை தரும் என்பதில் ஐயமில்லை. மேலும், இந்த இளம் வயதிலேயே டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் திறனை பும்ரா பெற்றுள்ளார். எனவே, இவரது பந்து வீச்சை எதிரணி வீரர்கள் எதிர்கொள்வது என்பது சிரமமான ஒன்று. வெளிநாட்டு மைதானத்திலும் இவரது வேகம் என்னை அசரவைக்கிறது. என்று அக்ரம் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்த ஆல்ரவுண்டர் இந்திய அணியில் ஆட வேண்டும் – கிளார்க் கருத்து

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்