எல்லா வகையான செல்வங்களையும் பெற்றுத்தரும், சுக்கிர யோகத்தை எப்படி அடைவது? சுலபமான ‘சுக்கிர முத்திரை’ பயிற்சி!

sukra-mudra1

ஒரு மனிதனுக்கு நல்ல மனைவி, நல்ல குடும்பம், அமைதியான வீடு, சொத்து, சுகம் இவையெல்லாம் கிடைக்க வேண்டுமென்றால் அவனுக்கு சுக்கிர யோகம் இருக்க வேண்டும். நம்மில் பலபேர் நன்றாக வாழும் ஒரு மனிதனை பார்த்து, ‘இவனுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை அமைந்திருக்கிறது? சுக்கிர யோக காரகன்.’ என்று சொல்லுவோம் அல்லவா? அப்போது சுக்கிர கிரகத்தின் ஆற்றலை நாம் பெற்று விட்டோமேயானால், சுகபோகமான வாழ்க்கையை அடைந்துவிடலாம் என்பதும் ஒரு உண்மை.

sukran

ஏனென்றால், மற்ற கிரகங்களை எல்லாம் விட, விசேஷமான, சுகபோக பலனை தருபவர் சுக்கிரன் மட்டுமே. இந்த சுக்கிர கிரகத்தின் ஆற்றலை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? பலபேர் அறிந்திராத ஒரு பயிற்சி உள்ளது. அது சுக்கிர முத்திரை பயிற்சி. அந்த பயிற்சியை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பயிற்சியினை உணவு சாப்பிட்ட பின்பு, அரை மணி நேரம் கழித்து செய்ய வேண்டும். உங்களுடைய பொருளாதார பிரச்சனைகள் தீர்ந்து, பொருளாதாரத் தேவைகள் முழுமையாக பூர்த்தியடைய, இந்த முத்திரை மிகவும் நல்ல வழிகாட்டியாக இருக்கும். பயிற்சியை தொடங்குவதற்கு முன்பு உங்களது மனதை அமைதியாக வைத்துக் கொண்டு, சம்மணம் போட்டு கிழக்கு பக்கம் நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள்.

sukra-mudra

அதன் பின்பு, உங்களது இடது கையின் கட்டை விரலுக்கு கீழ்ப்பகுதியில் இருக்கும் மேடான பகுதியை, உங்களுடைய வலது கை கட்டை விரலால் அழுத்திப் பிடித்து கொள்ள வேண்டும். மேல உள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ள சுக்கிர முத்திரையை, 20 நிமிடம் வரை தொடர்ந்து பிடிக்க வேண்டும். இப்படியே தூக்கிப் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களது உள்ளங்கை வானத்தை நோக்கியவாறு, முத்திரை மாற்றப்படாமல் உங்கள் மடியில் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

முத்திரையை பிடிக்கும் இருபது நிமிடமும், ‘ஓம் சுக்ராய நம’ என்ற சுக்கிரனின் மந்திரத்தை மனதார உச்சரிக்கவேண்டும். அதன் பின்பு 20 நிமிடங்கள் கழித்து உங்களுக்கு இருக்கும் பொருளாதார பிரச்சனை, தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர வேண்டும் என்று சுக்கிரபகவானிடம் வேண்டிக் கொள்ளுங்கள். தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வரலாம். பலபேருக்கு இந்த சுக்கிர முத்திரையை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிகமான பலன் தரும் சில முத்திரைகளின் இந்த சுக்கிர முத்திரையும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

sukran

முத்திரைகளுக்கு எப்படிப்பட்ட விசேஷ பலன் உண்டு என்பதை, முறையான பயிற்சியை, தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மட்டுமே நம்மால் தெரிந்து கொள்ள முடியும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சுக்கிரனின் பலத்தை நீங்கள் பெற வேண்டும் என்றால், இந்த முத்திரை உங்களுக்கு நிச்சயம் வழி வகுக்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இதையும் படிக்கலாமே
இரவில் தூக்கம் வராமல் பழைய எண்ணங்கள் அசைபோடுகின்றதா? 5 நிமிடம் போதும் வராத தூக்கமும் கட்டாயம் வரும்.

இது போன்ற யோக முத்திரைகள் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Shukra mantra for wealth. Sukra mudra Tamil. Shukra mudra benefits. Shukra mudra.