சித்தர் காற்றோடு பறக்கும் நேரடி காட்சிகள் – வீடியோ

siddhar flying
- Advertisement -

மனதில் வஞ்சம், பொறாமை, கோபம் போன்ற கீழான எண்ணங்களை வைத்துக்கொண்டு, முகத்தில் போலியான புன்னகையை, பிறருக்கு காட்டி தான் இந்த உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்களுடன் வசிப்பதால், தங்களின் தவ வாழ்வு பாதிக்கப்படுவதாக கருதிய “சித்தர்களும், முனிவர்களும” ஆபத்தான விலங்குகள் வாழும் காட்டை, தங்கள் வசிப்பிடமாக தேர்ந்தெடுத்தனர். அப்படி சித்தர்கள் அக்காட்டில் வாழும்போது, அவர்கள் அங்கு புரியும் அற்புதங்களை நாம் அறிவதில்லை. ஆனால் அத்தகைய காட்டு பகுதியில் வசிக்கும் சித்தர் ஒருவர் புரிந்த அதிசயத்தை தற்செயலாக ஒருவர் படம் பிடித்த காணொளி காட்சி தான் இது.

- Advertisement -

இக்காணொளி தமிழ் நாட்டில், இன்றும் பல சித்தர்கள் வாழும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு காட்டுப்பகுதியை ஒட்டிய இடத்தில், ஒரு நபரால் தன் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இக்காணொளியை சற்று உன்னிப்பாக கவனித்தால் ஒரு நிழல் போன்ற ஒரு உருவம், ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு பறந்து செல்வது போன்ற ஒரு காட்சியை காணலாம். சிலருக்கு இக்காட்சி கேமராவின் கோளாறினால் இப்படியான காட்சி அந்த காணொளியில் பதிவாகியிருக்க கூடும் என்கிற எண்ணம் ஏற்படக்கூடும்.

ஆனால் இயற்கையின் நீதியையே மாற்றி அமைக்கும் சக்தி படைத்த சித்தர்கள், “ககன மார்க்கம்” அதாவது “ஆகாய வழியில்” தாங்கள் விரும்பிய இடத்திற்கு செல்லக்கூடிய திறன் பெற்றவர்கள். அப்படியான ஒரு சித்தர், ககன மார்கமாக செல்லும் போது, அந்த அற்புதத்தை இந்நபர், தற்செயலாக தன் கேமராவில் பதிவு செய்துள்ளார்.

மேலும் தாங்கள் செய்த தவம், யோகங்களினால் சக்தி வாய்ந்த “ஒளிஉடலை” பெற்று, மிகுந்த ஆற்றலை வெளிப்படுத்தும் அவர்களின் அந்த உடல் உருவத்தை, விஞ்ஞான கண்டுபிடிப்பான கேமெராவால் தெளிவாக பதிவு செய்ய முடியாதது வியப்பேதும் இல்லை.

- Advertisement -