ரைட் சகோதரர்களுக்கு முன்பே விமானத்தை கண்டுபிடித்தார்களா சித்தர்கள் ?

Siddhar Vimana

மனிதன் ஆதிமனிதனாக இருந்த காலத்தில் முதலில் எங்கு பயன்பட்டாலும் தானே நடந்து சென்றான். சிறிது காலத்திற்கு பின்பு விலங்குகள் மீது அமர்ந்து பயணப்பட்டான். தனது அறிவாற்றல் வளரும் காலத்தில் சக்கரத்தை கண்டுபிடித்த மனிதன், பலவிதமான வாகனங்களை உருவாக்கி, இன்று இன்னோரு கிரகத்திற்கே பயணிக்கும் வகையில் போக்குவரத்து சாதனங்களை கண்டுபிடித்திருக்கிறான். அதில் ஒன்று தான் வானில் பறக்கும் விமானம். இந்த விமானத்தை பற்றி நமது வேத கால ரிஷிகள் கண்டுபிடித்த சில விடயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Agathiyar

1903 ஆம் ஆண்டு அமேரிக்கா நாட்டில் ஒரு ஊரில், ஞாயிற்று கிழமையன்று கிறிஸ்தவர்களின் கூட்டம், தேவாலயத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில் அந்த தேவாலயத்தின் பாதிரியார் “மனிதன் ஆகாயத்தில் பறக்க வேண்டும் என்று தேவன் விரும்பியிருந்தால் அவனுக்கு இறக்கைகளை கொடுத்திருப்பார். ஆகவே மனிதனால் வானில் ஒரு போதும் பறக்க முடியாது” என பைபிள் வசனத்தை கூறி சொற்பொழிவாற்றினார். இது நடந்து ஆறு மாத காலத்தில் முதல் பறக்கும் ஆகாய விமானத்தை கண்டுபித்து அதில் பறந்து காட்டி உலகை ஆச்சர்ய பட வைத்தனர் “ரைட் சகோதரர்கள்”. அந்த பாதிரியாரும் ஆச்சர்யத்தில் வாயடைத்துப்போனார். ஏனெனில் பாதிரியார் வேறுயாருமல்ல ரைட் சகோதரர்களின் தந்தை தான் அவர். இது ஒருபுறம் இருக்க, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நமது சித்தர்கள், விமானத்தை கண்டுபிடித்து அதில் பயணித்ததற்கான பல குறிப்புகள் நம்மிடம் உள்ளன. அது பற்றி இனி காண்போம்.

பல விஞ்ஞான விடயங்களை பற்றி ஆராய்ந்த நமது ரிஷிகளும், சித்தர்களும் இந்த ஆகாய விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிபட்டிருந்துள்ளனர். ராமாயணத்திலேயே “புஷ்பக விமானம்” பற்றி கேள்விப்படுகிறோம். நமது தமிழ் மொழியின் சிறந்த காப்பியமான “சீவக சிந்தாமணியிலேயே” அக்கதையின் நாயகன் சீவகன் ஆகாயத்தில் பறக்கும் வகையில் ஒரு “மயிற் பொறியை” உண்டாக்கியதை நாம் படித்திருக்கிறோம். மேலும் நமது தமிழ் சித்தரான போகர் பெருமான் சீன நாட்டில் சில காலம் வாழ்ந்து வந்த போது, அந்த நாட்டின் மன்னருக்கு ஆகாயத்தில் பறக்கும் விமானம் போன்ற ஒன்றை உருவாக்கி தந்தாதாக சீன நாட்டு குறிப்புக்கள் கூறுகின்றன.

bogar-sidhar

நமது நாட்டில் வாழ்ந்த “பரத்துவாஜ” முனிவர் “வைமானிக்க சாஸ்த்ரா” என்கிற நூலில் ஆகாய விமானங்களை எப்படி உருவாக்குவது என்பதை பற்றியும், அதை எந்த பொருட்களை கொண்டு செய்வதை பற்றியும், உருவாக்கிய விமானங்களை எப்படி இயக்குவது என்பதை பற்றியும் எழுதியுள்ளார். ஆனால் சில காலத்தில் அந்த நூலில் சில முக்கிய பகுதிகளை பரத்துவாஜ முனிவர் அழித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து பரத்துவாஜரின் சீடர்கள் அவரிடம் கேட்ட போது “இந்த விமான தொழில் நுட்பம் எதிர்காலத்தில் மனிதன், தன் சக மனிதனை அழிக்க பயன்படுத்துவான் என்பதால் தான் எழுதிய சில முக்கிய குறிப்புகளை அழித்துவிட்டதாக கூறினார் பரத்துவாஜ முனிவர்.