இரவில் அதிக நேரம் கண் விழித்தால் என்ன நடக்கும்? என்று சித்தர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்கள்!

sleep-siddhar
- Advertisement -

பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில் அனைவரும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறோம். ஓய்வு எடுப்பதற்கு உரிய நேரம் இரவு நேரம் மட்டுமே ஆகும். பூமியின் தட்பவெப்ப சூழ்நிலை மாறி இரவு நேரத்தில் குளிர்ச்சியாகி தூங்குவதற்கு ஏதுவாக அமைந்து உள்ளது. ஆனால் இக்காலத்திலும் நாம் ஓய்வு எடுக்காமல் தேவையில்லாத வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தால் நமக்கு என்ன நடக்கும்? என்று அன்றே சித்தர்கள் பாடல் மூலம் நமக்கு தெரிவித்து விட்டு சென்றுள்ளனர். அப்பாடலும், பாடலுக்குரிய விளக்கங்களும் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

sleeping

இரவு நேரத்தில் எப்பொழுதும் தூங்கும் போது குப்புற படுத்து தூங்கக் கூடாது. மல்லாந்து படுப்பவர்கள் கால்களை அகட்டிக் கொண்டும் தூங்கக்கூடாது. சரியான திசையில் நாம் தூங்கா விட்டால் நம் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் குறட்டை போன்ற தொந்தரவுகள் ஏற்படும். மேலும் ஆழ்ந்த தூக்கம் என்பது இவர்களுக்கு ஏற்படுவது இல்லை. லேசான சத்தம் கேட்டால் கூட எழுந்து விடுவார்கள். மனிதன் குறைந்தது 6 மணி நேரமாவது இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தை உணர வேண்டும் அப்போது தான் மறுநாள் முழுவதும் அவரால் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும். மூளையில் இருக்கும் மந்தமும் மாறி சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

- Advertisement -

சித்தர் பாடிய பாடல்:
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்!!!

olai-chuvadi

பாடலின் பொருள்:
இரவு நேரத்தில் சரியாக தூங்க முடியாதவர்கள் தங்களுடைய உடலில் சோர்வு உண்டாகி புத்தியில் மயக்க நிலையை ஏற்படுத்திக் கொள்வார். இதனால் தெளிவாக அவர்களால் சிந்திக்க முடியாமல் போய்விடும். உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகமும் சோர்வு தரும். பயம், படபடப்பு, மந்தம், செரியாமை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும் என்பது இப்பாடலில் பொதியப்பட்டுள்ள உண்மையாகும்.

- Advertisement -

திசைகள்:
1. உத்தமம் கிழக்கு
2. ஓங்குயிர் தெற்கு
3. மத்திமம் மேற்கு
4. மரணம் வடக்கு

sleeping positions

என்று நாம் கூற கேட்டிருப்போம். அதாவது கிழக்கு திசையில் ஒருவர் தலை வைத்து படுப்பது மிகவும் சிறந்தது என்றும், தெற்கு திசையில் ஒருவர் தலை வைத்து படுத்தால் அவருக்கு ஆயுள் விருத்தி அதிகரிக்கும் என்றும், மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கெட்ட கனவுகள், கெட்ட அதிர்வுகள் போன்றவை ஏற்படாமல் தடுக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் வடக்கு திசையில் தலை வைத்து தூங்குபவர்களுக்கு உடல் அளவில் பாதிப்புகள் உண்டாகி ஆயுள் குறைந்து மரணம் ஏற்படும் என்கிறது இவ்வரிகள்.

Sleeping Position

ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் வடக்கு திசையில் தலை வைத்து படுப்பது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். வடக்கு திசையில் காந்த சக்தி அதிகம் இருக்கும் என்பதால் அந்த திசையில் தலை வைத்து படுக்கும் பொழுது பிராண சக்தியை மூளை இழக்கும். இதனால் மூளை பாதிப்பு, இதய பிரச்சனைகள், நரம்பு தளர்ச்சி போன்றவை ஏற்படும் அபாயம் உண்டு. எனவே சரியான நேரத்தில், சரியான திசையில் தலை வைத்துத் தூங்கினால் அனைவரும் நலம் பெறலாம்.

- Advertisement -