ஒளி ரூபத்தில் காட்சி தந்த சித்தர் – நேரடி காட்சிகள் – வீடியோ

Amman and siddhar
- Advertisement -

நமக்கு இந்த பூமியில் வாழ அனைத்தையும் தருவது இயற்கை. அதனால் தான் அந்த இயற்கையை “இயற்கை அன்னை” என அன்புடன் அழைக்கிறோம். அதிலும் அந்த இயற்கை அன்னையின் ஆற்றல் அதிகமிருக்கும் காடுகள், மலைகள், நதியோரங்களில் அற்புதமான கோவில்களை அமைத்து, தங்களை வாழ வைக்கும் அந்த இயற்கை அன்னையை தெய்வமாக பாவித்து வழிபட்டனர் நம் முன்னோர்கள். அப்படி இன்றும் காடும் மலையும் சார்ந்த இடத்தில் கோவில் கொண்டிருக்கும் ஒரு அம்மனை சாமானிய மக்கள் மட்டுமின்றி சித்தர்களும் வந்து வழிபடும் ஒரு அற்புதமான நிகழ்வு நடக்கிறது. ஒளி ரூபத்தில் சித்தர்கள் வந்து அந்த அம்மனை தரிசிக்கும் நேரடி காட்சிகள் இதோ.

- Advertisement -

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் இருக்கிறது திருவலக்கம்பாறை என்கிற ஒரு புனிதமான ஒரு மலை. இங்கு கோவில் கொண்டிருக்கும் “தவம் பெற்ற நாயகி” என்றழைக்கப்படும் “வாலை அம்மனின்” கோவில் உள்ளது. தெய்வீக சக்தி கொண்ட இக்கோவிலுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். அப்படி இங்கு வழிபட்டவர்கள் பலருக்கும் பல விதமான தெய்வீக அனுபவங்கள் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். அப்படி மலேஷியா நாட்டில் வசிக்கும், “அகத்திய சித்தரை” வழிபடும் யோகி ஒருவர் இப்பகுதியிலுள்ள ஒரு குகைக்குள் சென்று அகத்தியரை நினைத்து தியானம் செய்த போது, ஒரு சில நிமிடங்களிலேயே தன்னுடைய உடல் எந்த வித ஒரு உணர்ச்சியும் இன்றி அப்படியே கல் போல உறைந்து விட்டதாக கூறுகிறார். அந்த இடத்தில் இதற்கு முன்பு பல சித்தர்கள் தவம் செய்ததால் அங்கு நிறைந்திருக்கும் அவர்களின் ஆற்றலால் இப்படியான அனுபவத்தை அவர் பெற்றதாக கூறுகிறார்.

ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் இங்குள்ள கோவிலின் தெய்வமான வாலையம்மனுக்கு நள்ளிரவில் பூஜைகள் நடக்கிறது. அதில் ஏராளமான பக்தர்கள் இங்கு நெடுந்தூரம் பல விதமான கஷ்டங்களையும் தாண்டி இங்கு வந்து இந்த அருமையான பூஜைகளில் கலந்து கொள்கின்றனர்.

அத்தகைய பவுர்ணமி தினத்தில் இந்த தெய்வீகமான மலை மற்றும் காட்டுப்பகுதியில் இன்றும் அருவமாக வாழ்ந்து வரும் சித்தர்கள், அந்த பௌர்ணமி தின பூஜையின் போது “ஒளி ரூபத்தில்” தோன்றி இந்த வாலை அம்மனை வழிபடுவதாக கூறுகிறார்கள்.அத்தகைய ஒரு காட்சி பதிவு செய்யப்பட்டு இக்காணொளியின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -