சித்தர்களை வணங்கினால் இறையருள் கிடைக்குமா? சித்தர்களின் சக்தி என்ன? அவர்களால் எதெல்லாம் சாத்தியமாகும்?

siddhar
- Advertisement -

தமிழ் மரபின்படி 18 தலையாய சித்தர்கள் நம் நாட்டில் வாழ்ந்துள்ளனர். சித்தர் என்பதற்கு சித்தி பெற்றவர்கள் என்று பெயர். சித் என்றால் அறிவு என்று பொருள். சித்தி பெற்றவர்கள் என்றால் அறிவை பெற்றவர்கள் என்று பொருளாகும். சிவனை முழுமனதாக நினைத்து, அவரையே தியானித்து, தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, அதிசயங்கள் பல புரிபவர்கள் தான் சித்தர்கள். இவர்களை பற்றிய ஒரு தொகுப்பினை தான் இங்கு பார்க்கப் போகிறீர்கள்.

dhanvantari-siddhar

செல்வந்தர்கள் பலர் கோவில்களுக்கு செல்வதைவிட, சித்தர்களின் ஜீவசமாதிகளுக்கு சென்று, அவர்களை தொழுது வருவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இவ்வாறு அவர்களைத் தொழுது வர வானுயர புகழும், மனம் நிறைய மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், அளவில்லா செல்வமும் கிடைக்கின்றது.

- Advertisement -

சித்தர்கள் எட்டு வகை யோகங்கள் மூலம் அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம் ,ஈசத்துவம், வசித்துவம் போன்ற பெருஞ்சித்திகளை பெற்றவர்கள். அண்ட் 8 வகை யோகங்கள் இதோ.

theraiyar-siddhar

எட்டுவகை யோகங்கள்:
இயமம் – கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை மற்றும் புலனடக்கம்.
நியமம் – நல்லனவற்றை செய்து ஒழுக்க நெறி நிற்றல்.
ஆசனம் – உடலை பல்வேறு நிலையில் நிறுத்தி பயிற்சி செய்வர்.
பிராணயாமம் – சுவாசத்தை கட்டுப்படுத்துதல், பிராணவாயுவை உட்செலுத்துதல் மற்றும் வெளியிடுதல்.

- Advertisement -

பிரத்தியாகாரம் – ஐம்புலன்கள் வாயிலாக வெளியே செல்லும் மனதை உள்ளே நிறுத்தி பழகுதல்.
தாரணை – பிரத்யாகாரம் வாயிலாக உள்ளிழுத்த மனதை, நிலை நிறுத்துதல்.
தியானம் – மனதை ஒரு நிலைப்படுத்தி ஒரே சிந்தனையில் ஆழ்தல்.
சமாதி – மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது.

karuvurar Siddhar

அனுவைப் போன்ற தேகமும், மலையைப் போன்ற பலமும், காற்றைப் போன்று மென்மையும், எவ்வித பலமான இயற்கை சீற்றங்களினாலும் பாதிப்புகுள்ளாகாமல் இருப்பதும், எல்லா பொருட்களையும் தன்வசப்படுத்துவதும், மனதில் நினைப்பதை செய்வதும், தனது உடலிலிருந்து மற்றோர் உடலுக்குள் நுழைவதும், தேவர்களுக்கே கட்டளையிடுவதும், அனைத்தையும் தன் வசப்படுத்துவதும்
போன்றவை சித்தர்களின் பெருஞ்சித்திகள் ஆகும்.

- Advertisement -

சித்தர்கள் பொதுவாழ்வில் ஈடுபடாமல் அவர்கள் தங்களுக்கென்று ஒரு தனி வழியினை நிறுவிகொண்டு நாடு, நகரம், மொழி, இனம் அனைத்தையும் கடந்து இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தவர்கள்.

மருத்துவம், யோகம், ஜோதிடம், மந்திரம், இரசவாதம் இவை அனைத்தையும் தந்தருளிய பெருமை சித்தர்களையே சாரும். இப்பொழுது ஒரு பெரிய வளர்ச்சி மாற்றத்தை கொடுத்திருக்கும் விஞ்ஞானமும் சித்தர்கள் செய்து கொண்டிருந்த வாத வித்தையே ஆகும்.

sidhar

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எந்த ஒரு அறிவியல் உபகரணமும் இல்லாமல் உலோகம், உப்பு, பாஷாணம், வேர், பட்டை, விலங்குகளின் உடலில் உற்பத்தியாகும் சிறுநீர் போன்றவற்றை ஆராய்ச்சி செய்து கண்டறிந்தவர்கள்.

இவ்வாறு பல சிறப்பம்சங்கள் பொருந்திய சித்தர்கள் அனைவரும் நம் நாட்டில்தான் வாழ்ந்துள்ளனர். இப்போது வளர்ந்து கொண்டிருக்கும் அறிவியலிலுக்கும் அவர்களே முன்னோடிகளாக இருந்துள்ளனர். இன்றுவரை பல ஆராய்ச்சியாளர்களும் வியக்கும் வித்தைகளை சித்தர்கள் புரிந்துள்ளனர்.

agathiyar

இவ்வாறு அதிசயங்கள் பல புரிந்து, ஜீவசமாதி அடைந்தவர்களே சித்தர்கள். இவர்கள் உங்களது கோரிக்கைகளை இறைவனிடம் கொண்டு சேர்க்கும் தூதுவர்களாக இருக்கின்றனர். ஆதலால் இவர்கள் சமாதிகளுக்கு சென்று தொழுது வர உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் இவர்கள் மூலம் கடவுளிடம் சென்றடையும். இறைவனும் அவரின் அடியார்களின் விருப்பங்களை உடனே நிறைவேற்றுவார்.

- Advertisement -