தண்ணீரின் மேல் மிதந்து காட்டிய சித்தர் – வீடியோ

sidhar floting in water

யோகம், தியானம், மூலிகை வைத்தியம் போன்ற கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தான் நமது சித்தர்கள். இக்கலைகளை தமக்கு மட்டுமல்லாமல், பிறருக்கும் பயன்படும் வகையில் குறைகளோடு வருபவர்களின் குறைகளைப் போக்கி அவர்களின் வாழ்க்கையை சித்தர்கள் மேம்படுத்தினர். மனிதர்களால் நினைத்து பார்க்க முடியாத பல அதிசயங்களை நிகழ்த்தி காட்டும் வல்லமை சித்தர்களுக்கு உண்டு. அந்த வகையில் சித்தர்களின் ஆசியோடு தண்ணீரில் மிதந்து காட்டுகிறார் ஒருவர். இதோ அதன் வீடியோ.

முற்பிறவில் தான் “புலஸ்திய” சித்தரின் சீடராக இருந்ததாகவும், அவர் மற்றும் துர்க்கை அம்மனின் அருளாலேயே தான் சித்தர்களின் மூலிகை வைத்திய, யோக மற்றும் மாந்திரீக கலைகளை கற்றுத் தேர்ந்தாகவும் இந்நபர் கூறுகிறார். இவர் இருக்கும் இந்த சித்தர்களின் மலைப்பகுதிக்கு பிறவியிலிருந்தே ஊமையாக இருந்த ஒரு நபர் வந்து தங்கி சிகிச்சை பெற்ற போது, சித்தர்களின் அருளால் அவருக்கு பேசும் சக்தி கிடைத்ததாக கூறுகிறார்.

மேலும் தான் வசிக்கும் பகுதியிலிருக்கும் மக்களுக்கு ஏற்படும் தீய பாதிப்புகளை சித்தர்களின் “யந்திர, மந்திர” முறைகளைக் கொண்டு நீக்கி இருப்பதாக கூறுகிறார். சித்தர்களின் யோக சக்தியைப் பற்றி பேசும் போது “வாசி யோகம்” என்ற சித்தர்களின் சுவாசக் கலையை முறையாகக் கற்று அதை பிரயோகிக்கும் போது, அம்மனிதனால் “தண்ணீரின் மிதக்க, நடக்க” முடியும் என்று ஆணித்தரமாகக் கூறும் இவர் அதை செய்தும் காட்டியுள்ளார். சித்தர்களால் முடியாத செயல்கள் இப்பூமியில் எதுவுமில்லை என்ற உண்மைக்கு இந்த நிகழ்வு மேலும் வலு சேர்க்கிறது.