இந்த வார்த்தையை சொல்லி சிதறு தேங்காய் உடைத்தால் போதும். உங்கள் வேண்டுதல் உடனே பலிக்கும். கஷ்டங்கள் சுக்குநூறாக சிதறிப் போகும்.

vinayagar
- Advertisement -

பெரும்பாலும் நாம் விநாயகருக்கு தான் இந்த சிதறு தேங்காய் உடைக்கும் வழக்கத்தை வைத்திருப்போம். நம்முடைய கஷ்டங்கள் தூள்தூளாக வேண்டும் என்றாலும் இந்த சிதறு தேங்காயை உடைப்போம். நம்முடைய வேண்டுதல் நிறைவேறினாலும் சிதறு தேங்காய் உடைப்பது நம்மில் இருந்து வரும் வழக்கம். விநாயகர் தவிர மற்ற தெய்வங்களுக்கும் சிதறு தேங்காய் உடைக்கும் வழக்கம் சில பேரிடம் இருக்கிறது. ஆனால் சிதறு தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றும் போது நாம் என்ன செய்ய வேண்டும். எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதைப் பற்றிய சில ஆன்மீக ரீதியான தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

thengai

சில மூலிகை செடிகளுக்கு உயிர் உண்டு என்று சொல்லுவார்கள். அதனால்தான் அந்த மூலிகைச் செடிகளை பறிக்கும் போது அதற்கு காப்பு கட்டி சாபம் நிவர்த்தி செய்து பறிக்க வேண்டும் என்ற வழக்கமும் நம்மிடத்தில் உண்டு. மூலிகை செடிகளை போலவே தேங்காய்க்கும் உயிர் உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. தேங்காயை நம் கோவில்களில் சிதறு தேங்காய் விடும் போது அதற்கும் சாப நிவர்த்தி செய்தால் தான் நம்முடைய வேண்டுதல் சீக்கிரத்தில் பலிக்கும்.

- Advertisement -

எந்த தெய்வத்திற்கு நீங்கள் தேங்காய் உடைத்தாலும் சரி, அந்த தேங்காயை வாங்கி முதலில் மேலே இருக்கும் தேங்காய் முடிகளை சுத்தம் செய்து, கழுவி குடுமியுடன் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் உடைப்பதற்கு முன்பு ‘ஓம் சர்வ சக்கர டம்டம் ஸ்வாஹா’ என்ற மந்திரத்தை உச்சரித்து விட்டு அதன் பின்பு தேங்காயை சிதறு தேங்காய் விட்டால் போதும். உங்களுடைய கோரிக்கைகள் வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும் என்று சொல்லப்பட்டுள்ளது.

vinayagar3

சரிங்க, கோவிலில் மட்டும் தான் தேங்காய் உடைக்கின்றோமா? சமையலுக்கு வீட்டிலும் தேங்காய் உடைப்போம். கோவிலில் அர்ச்சனை செய்வதற்காகவும் தேங்காய் உடைக்கிறோம். அதெல்லாம் தவறு கிடையாதா. என்று சிலருக்கு இந்த இடத்தில் சந்தேகம் வரலாம். சிதறு தேங்காய் உடைக்கும் போது தான், தேங்காய் சுக்குநூறாக உடையும். ஆக சிதறுதே காய் விடும் போது தான் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். தவிர மற்ற தேவைகளுக்காக நாம் தேங்காயை சுக்குநூறாக உடைக்க போவது கிடையாது. மற்ற நேரங்களில் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிதறுதேங்காய் விடும்போது மட்டும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும். நாம் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறி விடும்.

- Advertisement -

சங்கட சதுர்த்திக்கு விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைக்கும்போது, திருஷ்டி சுற்றி சிதறு தேங்காய் உடைக்கும்போது, மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை உச்சரிக்கலாம்.

vinayagar

உங்களுக்கு நிறைவேறாத பிரார்த்தனை ஏதாவது இருந்தால் அந்தப் பிரார்த்தனை நிறைவேறும் என்று விநாயகருக்கு வேண்டிக்கொள்ளுங்கள். அந்த வேண்டுதல் நிறைவேறிய பின்பு விநாயகருக்கு சங்கட சதுர்த்தி அன்று சிதறு தேங்காய் உடைப்பதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களின் வேண்டுதல் சீக்கிரமே நிச்சயமாக நிறைவேறும். இந்த சிதறு தேங்காய் வேண்டுதலுக்கு அத்தனை சக்தி உண்டு.

இறைவனுக்கு வேண்டுதல் செய்து கொண்டு 11 தேங்காய் உடைத்தாலும் சரி, 108 தேங்காய் உடைத்தும் சரி, எத்தனை தேங்காயை சிதறு தேங்காயாக உடைக்கிறீர்களோ, அத்தனை முறை இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -