என்ன தான் படிப்பு இருந்தாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியவில்லையா? உங்கள் கை எழுத்தை இப்படி மாற்றி பாருங்கள் உங்கள் தலை எழுதும் தானாக மாறி வாழ்கை சிறப்பான முன்னேற்றத்தை நோக்கி நகரும்.

kai eluthu jothidam
- Advertisement -

கையெழுத்திற்கும் தலை எழுத்திற்கும் முக்கிய தொடர்பு உள்ளது என்பது பல கால நம்பிக்கையாக உள்ளது. கையெழுத்து நன்றாக இருந்தால் தான் தலையெழுத்தும் நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள். மனிதர்கள் அனைவரின் கையெழுத்தும் வெவ்வேறு மாதிரி இருப்பதை நாமே கண்கூடாக பார்த்திருப்போம். அதேபோல வாழ்க்கை நிலையும் வெவ்வேறாக தான் இருக்கும். ஒருவருடைய ககை எழுத்து எப்படி இருந்தால் அவருடைய வாழ்க்கை நிலை எப்படி இருக்கும் என்பது சில குறியீடுகள் மூலம் கணிக்கப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

கையெழுத்து என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதுவும் இந்த காலத்தில் தவறான இடத்தில் தவறாக கையெழுத்துப் போட்டு விட்டால், நம்முடைய வாழ்க்கை நிலையே மாறிப் போகிற சூழ்நிலை உள்ளது. பலர் தவறான இடத்தில் கையெழுத்து போட்டு தன் வாழ்க்கையே பாழான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த கையெழுத்தை நாம் தவறாக போடும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும்.

- Advertisement -

பலரும் பலவிதத்தில் கையெழுத்து போட்டாலும், வாழ்க்கை நலமாக இருப்பதற்கு அந்த கையெழுத்தில் சில விதிமுறைகள் இருக்கின்றன. கையெழுத்தை தவறான முறையில் போட்டால் அதன் பின் விளைவுகள் மிகவும் அதிகமாக இருக்கும். மேலும் அவர்களுக்கு முன்னோக்கிச் செல்லவோ அல்லது முன்னேறவோ தடைகளை அது ஏற்படுத்தும். இப்பொழுது எப்படி கையெழுத்து போட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

ஒருவர் தன்னுடைய கையெழுத்தை முன்னோக்கி சாய்ந்தபடி போடுவது என்பது அவருடைய எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய சக்தி அவருக்கு இருக்கிறது என்று அர்த்தம். மேலும் அந்த எதிர்காலத்தை நோக்கியே அவருடைய வாழ்க்கையை அவர் நடத்துவார். ஒருவர் தன்னுடைய கையெழுத்தை பின்னோக்கி போடுகிறார் என்றால் அவர் வாழ்வில் அவர் முடிந்த விஷயங்களை மட்டுமே பேசிக்கொண்டு தன் வாழ்க்கையை வீணடிப்பார் என்று அர்த்தம்.

- Advertisement -

ஒருவர் நட்சத்திரம் போட்டு கையெழுத்தை போடுவதால், அவருடைய வாழ்க்கையில் பிரகாசமாக வாழ வேண்டும் என்ற எண்ணங்களை அவருக்கு உருவாக்குகிறது, ஆனால் அதற்குப் பின்னால் வரக்கூடிய விஷயங்கள் தடங்கல்களை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. ஒருவர் தன்னுடைய கையெழுத்தை போட்டு முடித்துவிட்டு முழுசாக பின்னோக்கி இழுத்து திரும்பவும் முன்னோக்கி இழுக்கிறார் என்றால் அவருடைய மனநிலை நிலையானதாக இருக்கிறது என்றும் அவருடைய பொருளாதாரம் நிலையாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

ஒருவர் தன்னுடைய கையெழுத்தை மேல் நோக்கி போடுகிறார் என்றால் அவர் இன்னும் வேகமாக அடுத்தடுத்த செயல்களில் ஈடுபட ஆர்வமாக இருக்கிறார் என்று அர்த்தம்ப்படுகிறது. ஒருவர் தன்னுடைய கையெழுத்தை கீழ் நோக்கி போடுகிறார் என்றால் அவர்களுடைய வாழ்க்கை சரியில்லாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: குரு பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்.

சிலர் தங்கள் கையெழுத்தில் புள்ளிகளை வைக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். பொதுவாக புள்ளி வைப்பது என்பது முற்றுப் பெறுவதற்குரிய அர்த்தமாகும். நம்முடைய வாழ்க்கை தொடர்ச்சியாக நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்கள் கையெழுத்தில் புள்ளி வைக்க கூடாது.

- Advertisement -