வரவிருக்கும் குரு பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்.

- Advertisement -

நவகிரகங்களில் முழு சுப கிரகம் எனக் கருதப்படும் குரு பகவான் இந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி இரவு 11. 27 மணிக்கு மீன ராசியிலிருந்து, மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த குரு பெயர்ச்சியால் இந்த ஆண்டு முழுவதும் யோகமான பலன்களை பெற போகின்ற ஐந்து ராசியினர் யார் என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
2023 ஆம் ஆண்டு ஏற்படப் போகின்ற குரு பெயர்ச்சி மிதுன ராசிக்கு மேன்மையான பலன்களை கொடுக்க வல்லதாகவே உள்ளது. மிதுன ராசிக்கு 11 ஆம் வீடான மேஷ ராசியில் குரு பகவான் பெயர்ச்சியாவதால், குரு பெயர்ச்சி காலத்தில் மிதுன ராசியினருக்கு எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திலும் சிறப்பான வெற்றி கிடைக்கும். கோயில் திருப்பணி, தான தர்மங்கள் ரீதியிலான காரியங்களில் ஈடுபட்டு புண்ணியங்களை சேர்ப்பார்கள். சொன்ன சொல் பலிக்கும்.

- Advertisement -

சிலருக்கு கௌரவமான பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிட மாறுதல் கிடைக்கும். வேலை கிடைக்காமல் திண்டாடியவர்கள், புதிய வேலை வாய்ப்பை பெறுவார்கள். நீண்ட நாட்கள் தாமதமான திருமணம் போன்ற சுபகாரியங்கள் நல்லபடியாக நடைபெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு ஆரோக்கியமும், அழகும் நிறைந்த குழந்தை பிறக்கும். பொன், பொருள் ஆபரண சேர்க்கை ஏற்படும். புதிய வாகனம் அமையும். வருமானம் பல வகைகளில் வந்து சேரும்.

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த 2023 ஆண்டில் குரு பகவான் ஒன்பதாம் வீட்டிற்கு பெயர்ச்சியாவதால் ஆண்டு முழுவதும் மேன்மையான பலன்களே ஏற்படும். 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை சிம்ம ராசியினர் ராஜயோகத்தை பெறுவார்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு மிக சிறந்த லாபங்கள் ஏற்படும். “ஓடிப்போனவனுக்கு 9 ஆம் இடத்தில் குரு” என்கிற பழமொழிக்கேற்ப சிலருக்கு வெளியூர், வெளிநாடு சென்று பொருள் சேர்க்கும் யோகம் உண்டாகும்.

- Advertisement -

புதிய தங்க நகைகள் வாங்குவார்கள். இதுநாள் வரை தாமதமான காரியங்கள் அனைத்தும் சிறப்பான முறையில் பூர்த்தியாகும். சிலர் மகான்களின் ஆசிகளை பெறுவார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். சிலருக்கு அரசு பணி கிடைக்கும். கருத்து வேறுபாடல் பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். செல்வ சேமிப்பு பல மடங்கு பெருகும்.

துலாம்
துலாம் ராசியினருக்கு இந்த 2023 ஆம் ஆண்டில் குரு பகவான் 7 ஆம் வீட்டிற்க்கு பெயர்ச்சியாவதால் சிறப்பான பலன்கள் உண்டாகும். புது வீடு,, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும், தொழில், வியாபார ரீதியாக வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அதனால் பொருளாதார ஏற்றங்கள் ஏற்படும். தாய் வழி உறவுகள், மனைவி வழியில் சிலருக்கு தாராள பொருள் வரவு உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

- Advertisement -

இது நாள் வரை தடை ஏற்பட்ட சுப காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெறும். சிலர் தங்களின் நீண்ட நாள் பிராத்தனைகளை நிறைவேற்ற புனித தலங்களுக்கு செல்வார்கள். வேலை தேடி அலைந்து நொந்து போனவர்களுக்கு சிறந்த வேலை கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். கலை தொழிலில் இருப்பவர்கள் பொருளும், புகழும் ஒரு சேர பெறுவார்கள்.

தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த 2023 ஆம் ஆண்டில் குரு பகவான் 5 ஆம் வீட்டிற்க்கு பெயர்ச்சியாகிறார். குருபகவானின் ராசியான தனுசு ராசிக்கு 5 ஆம் இடத்திற்கு வருகின்ற குரு பகவானால் இரட்டிப்பான யோக பலன்கள் உண்டாகும். ஐந்தாம் இடம் என்பது புத்திர பாக்கிய ஸ்தானம் என்பதால் திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நன் மக்கட்பேறு கிடைக்கும். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

தன தானிய சேர்க்கை பல மடங்கு பெருகும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, அதன் மூலம் தன லாபம் ஏற்படும். சாதாரண பணியில் இருப்பவர்களுக்கு கூட கூடுதல் வருமானம் ஏற்படும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் காரணமாக செல்வம் குவியும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். சிலர் கோயில் திருப்பணி, அன்னதானம் போன்ற புண்ணிய காரியங்கள் செய்து இறைவனின் ஆசிகளை பெறுவார்கள்.

மீனம்
மீன ராசியினருக்கு இந்த 2023 ஆம் ஆண்டு குருபகவான் 2 ஆம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். இரண்டாம் வீடு என்பது வாக்கு ஸ்தானமாகும். எனவே நீங்கள் கொடுத்த வாக்கு அனைத்தையும் நிறைவேற்றவீர்கள். தாராளமான பொருள் வரவு ஏற்படும். மனோ தைரியம் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீட்டில் சுப காரிய செலவுகள் ஏற்படும். அரசியல் துறையில் இருப்பவர்கள் மக்கள் செல்வாக்கை பெறுவார்கள். புதிய பதவிகள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: அமாவாசையும், சூரிய கிரகணமும் சேர்ந்து வரும் ஏப்ரல் 20 அன்று இதை எல்லாம் செய்தால் 3 மகா தோஷங்கள் தீரும்

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சீரான வருமானம் ஏற்படும். வெளியூர் வெளிநாடு பயணம் லாபகரமானதாக இருக்கும். நேரடி, மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். உறவினர்களிடம் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் பெருகும். புதிய நபர்களின் அறிமுகத்தாலும் சிலருக்கு நல்ல வருவாய் ஏற்படும்.

- Advertisement -