- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசிக்கலை தீர்க்கும் முருக மந்திரம்

சிக்கலை தீர்க்கும் முருக மந்திரம்

- Advertisement -

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கென்று பலவிதமான வழிமுறைகள் இருக்கின்றன. பலவிதமான நாட்களும் இருக்கின்றனர். எந்த நாளில் வேண்டுமானாலும் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் என்பது கிடைக்கும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த முருகப்பெருமானை குறிப்பாக செவ்வாய்க்கிழமையில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் உண்டாகும். செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் நீங்கும். அப்படிப்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான மந்திர வழிபாடு நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய சிக்கல்களை தீர்க்கும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நம் பார்க்கப் போகிறோம்.

சிக்கலை தீர்க்கும் முருக மந்திரம்

முருகப்பெருமானுக்கு என்று பல விதமான மந்திரங்கள் இருக்கின்றன. அந்த மந்திரங்களை நாம் உச்சரிப்பதன் மூலம் முருகப்பெருமானின் அருளை நம்மால் எளிதில் பெற முடியும். அப்படிப்பட்ட மந்திரங்கள் மிகவும் முக்கியமான ஒரு மந்திரத்தை நாம் கூறுவதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான சிக்கல்களும் தீரும். சிக்கலை தீர்க்கும் சிங்காரவேலனாக இருந்து நம்மை காப்பாற்றுவார் முருகப் பெருமான்.

- Advertisement -

இந்த மந்திரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் நாம் கூறலாம். இருப்பினும் செவ்வாய்க்கிழமை கூறுவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது. அருகில் இருக்க கூடிய முருகப் பெருமானின் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானுக்கு முன்பாக இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து அங்கேயே அமர்ந்து முருகப்பெருமானின் இந்த மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும். தீபத்திற்கு முன்பாக ஏதாவது ஒரு சாக்லேட்டை மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் வைத்து மந்திரத்தை கூற வேண்டும். பிறகு முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்களை கொடுத்து தங்களின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முருகப்பெருமானை வழிபாடு செய்து விட்டு அங்கு இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு சாக்லேட்டை தர வேண்டும்.

இப்படி ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையில் நாம் இந்த மந்திர வழிபாட்டை செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சிக்கலாக இருந்தாலும் அவை அனைத்தையும் முருகப்பெருமான் தீர்த்து வைப்பார். ஆலயத்தில் இருந்து தான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் என்று இல்லை. ஆலயத்திற்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே தீபத்தை ஏற்றி வைத்து மந்திர வழிபாட்டை செய்யலாம். தொடர்ச்சியாக 48 நாட்கள் முருகனுக்கு விரதம் இருக்கும் பொழுது தினமும் தீபம் ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை பாராயணம் செய்யும்பொழுது முருக பெருமானின் அருளால் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும்.

- Advertisement -

மந்திரம்

” ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நமஹ “

இதையும் படிக்கலாமே: இன்று 15.9.2025 அவிதவா நவமி

முருகப்பெருமானின் பரிபூரணமான அருளைப் பெறவும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சிக்கல்கள் அனைத்தும் தீரவும் செவ்வாய்க்கிழமையில் மிகவும் எளிமையான முருகப்பெருமானின் மூல மந்திரத்தை கூறி வழிபாடு செய்யலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்