இந்த கருப்பு கயிறை கையில் கட்டிக்கொண்டால் போதுமே! உங்கள் கைகள் பணத்தை சிக்கனமாக செலவு செய்யும். சேமிப்பு சில நாட்களிலேயே இரட்டிப்பாகும். ட்ரை பண்ணி பாருங்க.

cash1
- Advertisement -

நம்முடைய சேமிப்பு அதிகரிக்க வேண்டும் என்றால், நம்முடைய கைகள் பணத்தை சிக்கனமாக செலவு செய்தாலே போதும். ஆனால், எத்தனை பேருடைய கைகள் செலவை கட்டுப்படுத்துகிறது? ரொம்ப கஷ்டமான விஷயம். செலவுகளை, வருமானத்திற்குள் கட்டுப்படுத்தி, வரக்கூடிய வருமானத்திலிருந்து சேமிப்பை எடுத்து வைப்பது என்பது மிகப்பெரிய விஷயம். இன்னும் குறிப்பிட்ட சொல்லப்போனால் சேமிப்பை எடுத்து வைத்துவிட்டு தான், அதன் பின்பு நம்முடைய செலவுக்கான கணக்கை போட வேண்டும். இது நிறைய பேருக்கு தெரியாத காரணத்தால் தான், கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

kadan1

சரி, உங்களுடைய கைகள் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்றால், ஆன்மீக ரீதியாக வெறும் 5 ரூபாய் செலவில் பவர்ஃபுல் பரிகாரங்கள் சிலவற்றைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதில் உங்களால் எது முடியுமோ அதை நீங்கள் செய்து பலனடையலாம்.

- Advertisement -

முதலில் 5 ரூபாய்க்கு கடையில் கிடைக்கும் வெறும் கருப்பு கயிறை வைத்து தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. பௌர்ணமி தினத்தில் உக்கிரமாக இருக்கும் நரசிம்மர், முனீஸ்வரர், அய்யனார் இப்படியாக எல்லை தெய்வங்களான, காவல் தெய்வங்களின் கோவில்களுக்குச் செல்ல வேண்டும். சில கோவில்களில் அந்த கோவில்களிலேயே மந்திரித்த கயிறு கொடுப்பார்கள். அப்படி இருந்தால் கோவிலில் கொடுக்கும் கயிறை நீங்கள் வாங்கி, உங்களது வலது கையில் கட்டிக் கொள்ளலாம். கையில் கயிறு கட்டி முடிச்சு போடும் பொழுது, எப்படியாவது ‘நீங்கள் பணத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்றும், உங்களுடைய சேமிப்பு இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் வேண்டுதலை வையுங்கள்.’ நிச்சயமாக சில தினங்களில் உங்களுடைய சேமிப்பு இரட்டிப்பாகும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

kula-dheiva-kovil

அப்படி அந்த கோவில்களில் மந்திரித்த கயிறு கொடுக்கவில்லை என்றால், நீங்களே ஒரு கையிருப்பு கயிறை வாங்கி பூசாரியிடம் கொடுத்து, அர்ச்சனை செய்து கொடுக்கச் சொல்லி, அந்த கயறை உங்கள் கையில் கட்டிக் கொள்ளலாம். தவறொன்றும் கிடையாது. இப்படியாக இந்த கருப்பு கயிறை கட்டி கொண்டால் நிச்சயமாக உங்கள் செலவுகள், உங்கள் கையின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.

- Advertisement -

இரண்டாவதாக வறுமையைப் போக்கி சேமிப்பை இரட்டிப்பாக்குவதில் நெல்லிக்காய்க்கு முதலிடம் உண்டு. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் உங்கள் வீட்டில், மகாலட்சுமிக்கு நெல்லிக்காயை நிவேதனமாகப் வைத்து பூஜை செய்தாலும் சரி, அல்லது கோவில்களுக்கு சென்று நவகிரகங்களில் சுக்கிரனுக்கு நெல்லிக்காயை நிவேதனமாகப் படைத்து, அதில் இருந்து ஒரு நெல்லிக்காயை மட்டும் நீங்கள் எடுத்து, மீதமுள்ள நெல்லிக்காயை அந்த கோவிலுக்கு வருகை தருபவர்களுக்கு தானமாக கொடுத்து வரும் பட்சத்தில், உங்களுடைய வருமானம் இரட்டிப்பாகும்.

kaapu kayiru

வெறும் மூன்று நெல்லிகாயை கொண்டுபோய், சுக்கிர பகவானுக்கு நிவேதனமாகப் படைத்து, 2 பேருக்கு, இரண்டு நெல்லிக்காய்களை தானம் கொடுத்து, ஒரு நெல்லிக்காயை நீங்கள் உங்கள் வீட்டுக்கு கொண்டுவந்து, உங்களுடைய உணவில் சேர்த்துக் கொண்டாலும் சரி அல்லது சாறு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு வெறும் சாறு குடித்தாலும் சரி, உங்களுக்கு சேமிப்பு இரட்டிப்பாகும்.

- Advertisement -

nellikai

குறிப்பாக பரணி நட்சத்திரம், பூரம் நட்சத்திரம், பூராடம் நட்சத்திரம் இந்த மூன்று தினங்களில் நெல்லிக்காயை உங்கள் சமையலுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகள், பரணி, பூரம், பூராடம் இந்த நான்கு நாட்களில் நெல்லிக்காயை சாப்பிட்டு வருபவர்களுக்கு நிச்சயம் வீண் விரயம் குறையும். வருமானம் அதிகரிக்கும். ஆத்மார்த்தமாக நம்பிக்கையோடு இந்த பரிகாரங்களை செய்து பார்த்தால் சில தினங்களிலேயே உங்களால் பலனை உணர முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் எந்த காரியத்தை செய்தாலும் அதில் தோல்வி மட்டுமே ஏற்படுகிறதா? பல இடங்களில் அவமானப்படுகிறீர்களா? பஞ்சமி திதியில் அம்மனுக்கு இந்த தீபம் ஏற்றி வழிபட வெற்றி உங்கள் பக்கம்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -