உங்களது வருமானம் இரட்டிப்பாக வெள்ளி மோதிர ரகசியம்.

silver-ring2

நமக்கு கிடைக்கின்ற வருமானத்தில் ஒரு சிறிய தொகையை சேமிக்க வேண்டும் என்றாலே அதற்காக நாம் படாதபாடு படவேண்டி இருக்கிறது. ‘இந்த செலவை குறைக்கலாமா? அந்த செலவை குறைக்கலாமா?’ என்று யோசித்து கையில் இருக்கும் பணத்தை சேமித்து வைக்க எப்படியெல்லாமோ யோசிப்போம். ஆனால் கையில் இருக்கும் தொகை ஏதாவது ஒருவிதத்தில் செலவாகி விடுகிறது. ஆனால் சில பேரிடத்தில் மட்டும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். அவர்களுக்கு பிறப்பிலேயே அந்த யோகம் இருந்தாலும் கூட, பணம் மேலும் மேலும் சேர்ந்து கொண்டே இருக்க ஏதாவது ஒரு பரிகாரங்களை பின்பற்றிக் கொண்டே இருக்கிறார்கள். வட நாட்டில் உள்ளவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும், பரிகாரங்களை செய்வதில் எந்த குறையும் வைப்பதில்லை. அவர்கள் செய்யும் ஒரு ரகசிய பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

silver-ring

இந்த பரிகாரத்திற்க்கு தேவையான பொருட்கள் பச்சைக் கற்பூரம் ஒன்று, வெள்ளி மோதிரம், வெற்றிலை ஒன்று, கண்ணாடி பவுல் ஒன்று. முதலில் கண்ணாடி பவுளை எடுத்துக்கொண்டு அதில் வெள்ளி மோதிரத்தை போடவேண்டும். வெள்ளி மோதிரம் தான் பயன்படுத்த வேண்டும் மற்ற உலோக மோதிரங்களை பயன்படுத்தக் கூடாது. இந்த வெள்ளி மோதிரமானது உங்கள் வீட்டில் யார் பணம் சம்பாதிக்கிறார்களோ, கணவன் சம்பாதித்தாலும் சரி, மனைவி சம்பாதித்தாலும் சரி, உங்கள் பிள்ளைகள் சம்பாதித்தாலும் சரி, இவர்களில் மூன்று பேரின் மோதிரத்தையும் போடலாம். ஆனால் கண்ணாடி பவுலில் போடுவதற்கு முன்பு உங்களது மோதிரத்தை நன்றாக கழுவி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கண்ணாடி பவுலில் வெள்ளி மோதிரம், பச்சை கற்பூரம், இவைகளைப் போட்டு அதன் மேலே காம்பு கிள்ளிய வெற்றிலை ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் வைக்கப்படும் வெற்றிலையின் காம்பு சுவாமியின் வலது பக்கமாக இருக்கவேண்டும். (உங்களுக்கு வலது பக்கம் அல்ல. சுவாமிக்கு வலது பக்கம் இருக்குமாறு காம்பு பகுதியை வைக்கவேண்டும்.) அவ்வளவுதான்.

இந்தப் பரிகாரத்தை வியாழக்கிழமை இரவு 7 மணியிலிருந்து 8 மணிக்குள் செய்துவிட்டு நீங்கள் தயார் செய்த அந்த கண்ணாடி பவுலை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து விட வேண்டும். மறுநாள் காலை வெள்ளிக்கிழமை குளித்து முடித்துவிட்டு, வழக்கம் போல் வெள்ளிக்கிழமை பூஜை புனஸ்காரங்களை முடித்துவிட்டு, அந்த மோதிரத்தை எடுத்து இடது பக்கம் ஆள்காட்டி விரலில் தான் போட்டுக் கொள்ள வேண்டும். இப்படி இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து தான் பாருங்களேன். இதில் எந்த ஒரு கஷ்டமும் இல்லை. நிச்சயம் உங்கள் மனது திருப்தி அடையும் வகையில் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

silver-ring1

பொதுவாக வெள்ளி என்பது சந்திரனை குறிக்கின்றது. நம் உடலில் இருக்கும் நீர், கபம் இவற்றை சமநிலையோடு வைத்துக்கொள்ள நாம் அணிந்து கொள்ளும் வெள்ளி மோதிரமானது பயன்படுகிறது. எந்தவிதமான பரிகாரங்களை செய்யாமல் வெள்ளி மோதிரத்தை அணிந்து கொண்டால் கூட அது நம் உடலில் இருக்கும் கெட்ட நச்சுக்களை வெளியேற்றும் வேலையை செய்து கொண்டே தான் இருக்கும். இதனால் நம் உடலும், மனதும் ஆரோக்கியமாகவே இருக்கும். பரிகாரங்களை செய்ய விரும்பாதவர்கள் கூட, சாதாரணமாக வெள்ளி மோதிரங்களை கையில் அணிந்து கொள்ளலாம். வெள்ளியால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிந்து கொள்வது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று பல குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே
அடுத்தவர்களின் வயிற்றெரிச்சல் உங்களை தாக்காமல் இருக்க இந்த நான்கு பொருட்களை எரித்தாலே போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Velli mothiram Tamil. Velli mothiram palangal. Velli mothiram payangal. Silver ring benefits in Tamil.