சம்பாதிக்கும் பணம் தேவையில்லாமல் செலவாவதை தடுக்க இப்படியும் ஒரு வழி இருக்கிறதா? இது தெரியாமல் போச்சே!

silver-savi-kothu-cash

ஒருவருடைய சுய உழைப்பில் சம்பாதித்த பணம் ஒவ்வொன்றும் பொன்னை விட உயர்வான மரியாதையை கொண்டுள்ளது. ஆயிரம் கோடி சம்பாதித்தாலும் அது சுய உழைப்பில் வந்தது அல்ல என்றால் அதற்குரிய மரியாதையை நாம் தருவதில்லை. கன்னா பின்னாவென்று செலவழித்து விடுவோம். அதே சமயத்தில் 100 ரூபாய் சம்பாதித்தாலும் சுய உழைப்பில் சம்பாதித்த பணம் என்றால் நல்ல தேவையான விஷயங்களுக்காக செலவு செய்வோம். அப்போது அதற்குரிய மரியாதை வேறுபடுகிறது. ஆக பணத்தை விட நம்முடைய உழைப்பிற்கு, வியர்வைத் துளிகளுக்கு தனி மதிப்பு இருக்கிறது என்பதை இங்கு உணர வேண்டும்.

money

இப்படி சம்பாதித்த பணம் வீண்விரயம் ஆவதற்கு மிக முக்கிய காரணமாக உங்களுடைய சுய ஜாதகம் மற்றும் அதற்கு உரிய கிரக அமைப்புகள் இருக்கும். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய், சனி சேர்க்கை ஏற்பட்டால் அவர்களுடைய வாயில் நல்ல வார்த்தையே வராது. அமங்கலச் சொற்கள், அசுப சொற்களையும் சரளமாக வீசி விடுவார்கள். இது போல் ஒவ்வொரு கிரக சேர்க்கைக்கும் உரிய குணாதிசயங்கள் மனிதனுக்கு இயற்கையாகவே ஏற்பட்டு விடுகிறது.

ஒரு சிலருக்கு திடீரென அடிக்கடி வாயில் சனியனே என்கிற வார்த்தை வரும் அதை அவர்களால் மாற்றிக் கொள்ளவே முடியாமல் இருக்கும். இன்னும் சிலர் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட கால கட்டம் வரை காலை ஆட்டுவது, சொடக்கு போடுவது போன்ற இதுவரை செய்யாத செயல்களை புதிதாக செய்வார்கள். உங்களுடைய சுய ஜாதகத்தில் கிரக அமைப்புகள் படியே உங்களுடைய அசைவுகளும், பேச்சுகளும், செயல்களும் கூட இருக்கும். இது தான் வலிமையான ஜோதிடத்தின் அறிகுறிகளாக இருக்கின்றன.

jathagam astro

ஆன்மீகத்தையும் ஜோதிடத்தையும் எந்த வகையிலும் பிரித்து விட முடியாது. அவ்வகையில் காரிய வெற்றிக்கு, வீண் விரயம் ஆவதை தடுக்க சில விஷயங்களை கடைபிடித்தால் போதும். போருக்கு செல்லும் வீரனுக்கு வழியனுப்புவது போல் நம்முடைய முன்னோர்களும் வேலைக்கு செல்லும் தங்களுடைய கணவன்மார்கள் அல்லது பிள்ளைகளுக்கு நெற்றியில் குங்குமம் இட்டு வழி அனுப்புவது வழக்கமாக இருந்து வந்தது. இதனால் குடும்ப உறவுகள் வலுவாக இருந்தது. ஆனால் இப்போது இவற்றை யாரும் பின்பற்றுவதில்லை. நீங்கள் போகின்ற காரியம் வெற்றி பெற அந்த வீட்டின் குலவிளக்காக இருக்கும் தாயை அல்லது உங்களுடைய மனைவியின் கைகளால் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு செல்லுங்கள். 100% நீங்கள் போகிற காரியம் வெற்றி தான்.

- Advertisement -

அதுபோல அந்த காலத்திலெல்லாம் பெண்மணிகள் இடுப்பில் சாவிக்கொத்தை வைத்துக் கொண்டு திரிவார்கள். வெள்ளி என்ற உலோகம் சுக்கிரன் உடைய ஆதிக்கத்தை கொண்டது. வெள்ளியாலான சாவிக்கொத்து மகாலட்சுமி அல்லது மீன் அல்லது சக்கரம் போன்ற வடிவங்களில் வாங்கி வைத்துக் கொண்டால் பணவரவிற்கு பஞ்சமே இருக்காது. இரும்பு என்பது சனியினுடைய ஆதிக்கம் கொண்டது என்றாலும் பண வரவிற்கும், பணத்தடை நீங்கவும் இரும்பாலான பணப்பெட்டி வைத்திருப்பது மிகவும் நல்லது. பெரிய பெரிய லாக்கர்கள் எல்லாம் இரும்பால் செய்யப்படுவதும் இந்த காரணத்திற்காகவும் தான்.

silver-savi-kothu

இரும்பை யாராலும் அசைக்க முடியாது, ஜோதிட ரீதியாக பணவரவை ஈர்க்க கூடியதும் ஆகும். ஒரு இரும்பு பெட்டியில் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வாருங்கள். அந்தப் பெட்டிக்கு பித்தளை அல்லது சில்வர் பூட்டு போட்டு அதற்கு கொடுத்துள்ள சாவியை மட்டும் வெள்ளி சாவி கொத்துடன் கோர்த்து வையுங்கள். இதற்கு லட்ச லட்சமாக சம்பாதிக்க வேண்டும் என்கிற விதிமுறை எல்லாம் இல்லை. பத்தாயிரம் சம்பாதித்தாலும் இதுபோல் செய்து பாருங்கள். நிச்சயம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் தேவையற்ற வழிகளில் செலவாவதை இந்த பரிகாரம் தடை செய்யும். தாராள பணவரவும் நிச்சயம் இருக்கும்.

இதையும் படிக்கலாமே
கடுமையான திருஷ்டியை போக்கும் மரம்! அது என்ன மரம்? எப்படி திருஷ்டியை போக்கும் தெரிந்தால் வியந்து போவீர்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.