இந்த விஷயம் மட்டும் தெரிஞ்சா ஜாதிமல்லி செடியை சிறிய தொட்டியில் கூட நிறைய பூக்கள் பூக்க வைக்க முடியும்.

jathi-malli0
- Advertisement -

ஜாதிமல்லி செடியை பொருத்தவரை நர்சரிகளில் வாங்குவதை விட பதியம் போட்டு எடுப்பதே நமக்கு நிறைய பூக்கள் கொடுக்கும். பெரும்பாலும் நர்சரிகளில் விற்கும் ஜாதிமல்லி செடி வகைகளை பார்த்தோமானால் வாங்கும் பொழுதே அதில் நிறைய பூக்கள் இருக்காது. அப்படியானதாக நாம் வாங்கி விடக்கூடாது. உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது ஜாதிமல்லி செடி வைத்திருந்தால் அதிலிருந்து பதியம் போட்டு எடுத்துக் கொண்டு வரலாம். கிளையை எடுத்து வந்து நட்டு வைத்தால் வளரும். ஆனால் எல்லா சமயங்களிலும் இது கை கொடுப்பதில்லை. ஜாதிமல்லி செடியை சிறிய தொட்டியில் எப்படி வளர்ப்பது? அதில் எப்படி அதிக பூக்கள் பூக்க வைப்பது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

jathi-malli1

ஜாதிமல்லி மிகவும் அழகான மற்றும் வாசனையான பூக்கள். இதை அனைவருக்குமே வீட்டில் வளர்க்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். வீட்டில் இடம் இல்லாதவர்கள், தொட்டிகளில் தான் வளர்க்க வேண்டிய நிலைமை இருக்கும். ஜாதி மல்லியை தொட்டியிலும் நாம் சுலபமாக வளர்க்க முடியும்.

- Advertisement -

ஜாதிமல்லி செடியில் பூக்கள் பூக்க, பூக்க அது காய்ந்து கொண்டே வரும். அந்த கிளைகளை மட்டும் வெட்டி வர வேண்டும். ஒருமுறை நீங்கள் ஒரு கிளையில் இருந்து மொட்டுக்களை பறித்து விட்டால் அந்த கிளை காய துவங்கிவிடும். அப்போது அந்தக் கிளையை வெட்டி விட்டால் தான், உங்களுக்கு புதிய கிளை துளிர்த்து நிறைய பூக்களை கொடுக்கும். அதை வெட்டாமல் அப்படியே விட்டுவிட்டால் காடுபோல் வளர்ந்து வறண்டுவிடும்.

jathi-malli

அதுபோல் வாரம் ஒருமுறையேனும் தொட்டியில் இருக்கும் மண்ணை கிளறி விட வேண்டும். அப்போது தான் அந்த செடிக்கு மண்ணின் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். நீங்கள் தினமும் தண்ணீர் ஊற்றும் பொழுது தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்கு ஒரே அடியாக ஊற்றக்கூடாது. மண்ணும், அதன் வேரும் ஈரப்பதத்துடன் இருந்தால் போதுமானது. மண்ணை கிளறி விடும் பொழுது அதில் வளர்ந்து இருக்கும் சிறிய சிறிய செடி வகைகளை எடுத்து விட வேண்டும்.

- Advertisement -

அதுபோல் மாதம் ஒரு முறையாவது அதற்கு உரம் போட வேண்டும். தொழு உரம், மண்புழு உரம் அல்லது நம் வீட்டிலேயே செய்யும் காய்கறி கழிவு உரம் இதில் ஏதாவது ஒன்றை போட்டால் போதுமானது. பூச்சி தொல்லைக்கு வேப்பிலை புண்ணாக்கு போடலாம். ஜாதிமல்லி செடி கிளைகள் உயர உயர வளரும் பொழுது அவற்றில் இருக்கும் மொட்டுகளை பறித்துவிட்டு கிளைகளை வெட்டிவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் சிறிய செடியாக இருந்தாலும் அதில் நிறைய பூக்கள் பூக்கும்.

jathi-malli2

ஜாதிமல்லி எப்படி பதியம் போடுவது?
நன்கு வளர்ந்த ஜாதிமல்லி செடியில் பெரிதாக நீண்ட கிளை ஒன்றை வளைத்து, வேறு ஒரு சிறிய மண் நிரம்பிய தொட்டியில் அப்படியே புதைக்க வேண்டும். நீங்கள் மண்ணில் புதைத்து வைக்கும் இடத்தில் கிளையில் இருந்து இலைகள் துளிர்த்து இருக்க வேண்டும். அதை மட்டும் சரியாக கவனித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். மண்ணில் புதைத்து அதன் மேல் சிறிதளவு மண்ணை கொட்டி கிளை வெளியே வராதவாறு நன்கு அழுத்தி விட வேண்டும். எந்த அளவிற்கு அழுத்தம் கொடுக்க முடியுமோ, அந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்து அழுத்தி விட வேண்டும்.

- Advertisement -

jathi-malli5

அதன் பின் அதன் மேல் ஒரு கல்லை வைத்து விடுங்கள். பதியம் போடும் செடிக்கு சூரிய ஒளியிலிருந்து நிச்சயம் பாதுகாப்பு தேவை. அதே போல் அதிக அளவில் தண்ணீர் ஊற்றக்கூடாது. மண் ஈரமாக இருக்க லேசாக ஊற்றினாலே போதும். தாய் செடியின் நிழல் இந்த பதியம் போட்ட செடியை மறைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சில நாட்களிலேயே நீங்கள் புதைத்து வைத்த கிளையிலிருந்து புதிய வேர்கள் முளைத்து தனி செடியாக வளர்ந்து நிற்கும். அப்போது அந்த செடியின் கிளையை வெட்டி விடுங்கள்.

jathi-malli4

இப்போது இந்த செடியை தனியே எடுத்து வளர்க்கலாம். இதைத்தான் பதியம் போடுவது என்பார்கள். இந்தச் செடியில் வேர் முளைக்கும் வரை அதை அசையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ரொம்ப ரொம்ப சுலபமாக ஒரு செடியில் இருந்து இன்னொரு ஜாதிமல்லி செடியை நாம் வளர்த்து விடலாம். இதை நாம் கடைகளில் வாங்கினால் அந்த அளவிற்கு பூக்குமா என்றும் தெரியாது. விலையும் அதிகமாக சொல்வார்கள். இந்த முறையில் நீங்களும் ஜாதிமல்லி செடியை வளர்த்து பயன் பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே
ரோஜா செடியில் 7 இலைகளை வெட்டலாமா? கூடாதா? அதிக பூக்கள் பூக்க என்ன செய்வது?

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -