அழகாக இருக்க வேண்டும் என்று யாருக்கு தான் ஆசை இல்லாமல் இருக்கும். அனைவருக்குமே ஆசை இருக்கத்தான் செய்யும். அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக பலரும் தங்கள் கையில் இருக்கக்கூடிய காசை கரியாக்கும் வகையில் பியூட்டி பார்லில் சென்று தங்களை அழகுப்படுத்திக் கொள்வார்கள். இந்த அழகு எத்தனை நாள் வரைக்கும் நிலைத்திருக்கும் என்பது அவர்களுக்கே தெரியாது. அதை தவிர்த்து விட்டு வீட்டில் இருக்கக் கூடிய இயற்கையான பொருட்களை பயன்படுத்தி நம்மை நாம் அழகு செய்து கொண்டோம் என்றால் அது நிரந்தரமாக நிலைத்திருக்கும். அந்த வகையில் வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான பொருட்களை வைத்து செய்யக்கூடிய எளிமையான அழகு குறிப்புகள் பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
மிருதுவான கைகளை பெற வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து கையில் தடவி வருவதால் கடினமான உள்ளங்கையில் இருக்கும் தோல் மென்மையாக மாறும். நீண்ட கூந்தலும் பளபளப்பான சருமமும் ஆரோக்கியமான நகமும் பெற நார்சத்துக்கள் நிறைந்த உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த காலத்திற்கு ஏற்றவாறு உதாரணத்திற்கு ஓட்ஸ், குயினா, லெண்டில்ஸ், ஆல்மோண்ட்ஸ், டார்க் சாக்லேட் போன்றவை.
உதடு மென்மையாகவும், அழகான நிறத்துடனும் இருக்க வேண்டும் என்றால் கொத்தமல்லி இலை சாறெடுத்து அதனை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். முகத்தில் பருக்களின் பாதிப்புகள் இருக்கிறவர்கள் எண்ணெயில் பொறித்த கிழங்கு வகைகள், காரம், புளிப்பு, கொழுப்பு மிகுந்த உணவுகள் எல்லாம் அதிகமாக சாப்பிடக்கூடாது.
நகம் என்பதே நம் உடல்நல ஆரோக்கியத்தை எடுத்துக்காட்டும் ஒன்றாகும். உடம்பில் கால்சியம் சத்து குறைவாக இருந்தது என்றால் நகங்களின் அழகு பாதிக்கப்படும். அதனால் கால்சியம் சத்து அதிகம் இருக்கும் உணவுப்பொருட்களை உண்ண வேண்டும்.
பொடுகு தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாற்றில் சிறிதளவு உப்பு கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளை கருவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின் மீது தடவினால் பரு குணம் ஆகும்.
இதனை ஒரு முறை செய்துவிட்டு எந்த பலனும் கிடைக்கவில்லை என்று சொன்னால் அதில் அர்த்தமே இல்லை. எதுவாக இருந்தாலும் 30 அல்லது 40 நாட்கள் ஆவது தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே பலன்கள் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே ஆண்களின் அழகு கூட டிப்ஸ்
இயற்கையான இந்த அழகு குறிப்புகளை தொடர்ச்சியாக நாம் பின்பற்றும் பொழுது நம்மை இயற்கையாகவே அழகுப்படுத்திக் கொள்ள முடியும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தாமல் இப்படி இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி நம் அழகை மேம்படுத்திக் கொள்வோம்.