ஆணுக்கு எதுக்கு அழகு, ஆணாக இருப்பதே அழகு என்று சொல்லும் காலம் மலையேறி, பெண்களுக்கு போட்டியாக தங்களை அழகுப் படுத்திக் கொள்வதில் ஆண்களும் களம் இறங்கிவிட்டார்கள் என்பதே உண்மை. ப்ளீச்சிங், ஃபேஷியல், புதுவிதமான ஹேர்ஹட், ட்ரெஸ்ஸிங் என்று ஆண்கள் தங்கள் தோற்றப் பொலிவை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புகிறார்கள். சருமப் பராமரிப்பில் சிறிது கவனம் செலுத்தினால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் முகம் பொலிவடையும். எனவே அவர்களுக்கு பயன்படும் அளவில் உள்ளதுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதி.
சருமத்தை சுத்தப்படுத்துவது தெளிவான சருமத்தை பெறுவதில் முக்கியமான படியாகும். தினமும் சருமத்தை சுத்தம் செய்வதற்கு அதிக நேரமும் முயற்சியும் தேவையில்லை. எளிதான இந்த குறிப்பை பின்பற்றினால் சருமம் சுத்தமாகும். சருமத்துக்கு ஏற்ப ஃபேஷ் வாஷ் தேர்ந்தெடுக்கலாம், சோப்பு இல்லாத மற்றும் இயற்கை பொருள்கள் கொண்ட பொருளை பயன்படுத்தி முகம் கழுவலாம். புதிய புத்துணர்ச்சியான சருமம் பெறுவதற்கு ரோஸ் வாட்டர் அல்லது கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம்.
ஆண்கள் அவ்வபோது அல்லது தினமும் ஷேவிங் செய்வதுண்டு. பெரும்பாலான ஆண்கள் ஷேவிங் செய்த பிறகு அப்படியே சருமத்தை விட்டுவிடுவதுண்டு. இதனால் துளைகள் விரிவடையக்கூடும். இந்த நேரத்தில் ஆண்டி செப்டிக் தோல் எரிச்சலை குறைக்க கூடும். வெட்டுக்களில் இருந்து தொற்றுநோயை தடுக்கிறது. ஈரப்பதத்தை தக்க வைத்துகொள்ள ஷேவிங் செய்த பிறகு பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். 15 நிமிடம் வைத்து விட்டு எப்பொழுதும் போல் முகம் கழுவலாம். இது துளைகளை மூடுவதற்கு உதவக்கூடும்.
பசும்பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை சேர்த்து இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் நன்கு மைபோல் அரைத்து சருமத்தில் தடவிவர ஆண்களின் வறண்ட சருமம் பளபளப்பாக மாறும். தினமும் அதிகாலை அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் ஆண்களின் அழகு கூடும். தினமும் ஒரு கிளாஸ் பாலில் தேவையான அளவு தேன் கலந்து அருந்திவந்தால், அனைத்து நோய்களையும் எதிர்த்து சருமம் அழகாகும் மற்றும் உடல் பளபளப்பாகும்.
ஆண்கள் தங்களது தலை முடிக்கு அதிகளவு விட்டமின் இ சத்து நிறைந்துள்ள ஷாம்பை பயன்படுத்தினால், முடி உதிர்வு பிரச்சனை சரியாகும். அதுமட்டும் இன்றி தலை முடி வேர்களுக்கு அதிக வலுவினை சேர்க்கும். முடி எப்போதும் கருமையாக இருக்கும்.
பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை. ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக வெளியுலக தொடர்பு இருக்கும். அவர்கள் தான் வெயில், மழை, தூசியிலும் செல்வார்கள். ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை. ஆண்களும் அழகிற்கு நேரம் ஓதுக்கி உடலை பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
இதையும் படிக்கலாமே: முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள அழகு குறிப்பு
பெண்களுக்கு நிகராக ஆண்களும் அழகாக இருக்கலாம். வீட்டில் எதுவும் செய்ய முடியாது பியூட்டி பார்லர் தான் போகவேண்டும் என்று நினைக்கும் எண்ணத்திற்கு குட் பை சொல்லுங்கள். அழகாக மின்னுங்கள் என்று கூறி இந்த பதிவினை இத்துடன் நிறைவு செய்து கொள்கிறோம்.