அட! இப்படியும் கூட இதனை செய்யலாமா? என்று நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு பிரட்டில் செய்யக்கூடிய ஒரு அருமையான கட்லட் ரெசிபி

cutlet
- Advertisement -

குழந்தைகளுக்கு விதவிதமாக சமைத்து கொடுத்தால் அவர்களும் தட்டாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அதிலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு நீங்கள் சுட சுட ஏதாவது ஒரு உணவு வகையை சாப்பிட கொடுத்து பாருங்கள். என்றும் அவர்கள் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அப்படி மாலை வேளையில் சட்டென செய்யக் கூடிய ஒரு மறு மறு ரெசிபியை பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாக கட்லட் என்பது கருணை கிழங்கு, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை வைத்து செய்து தான் சுவைத்திருக்கிறோம். ஆனால் வீட்டில் மீதமாக இருக்கும் பிரட் துண்டுகளை வைத்து இப்படியும் செய்ய முடியுமா என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மிகவும் சுவையான பிரட் கட்லெட் ரெசிபியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
பிரெட் துண்டு – 7, வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், வர மிளகாய்தூள் – அரை ஸ்பூன், நெய் – 3 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கேரட் – 1, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் பிரட் துண்டுகளை பொடியாக பிய்த்துக் கொண்டு, அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்க வேண்டும். அதே போல் கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு அரைத்து வைத்துள்ள பிரட் துகளுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் ஒரு கேரட்டை தேங்காய் துருவல் பயன்படுத்தி, நன்றாகத் துருவி இவற்றுடன் சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் சீரகத் தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து, அதன் மீது ஒரு ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும். பின்னர் இந்த கலவையில் இருந்து சிறு சிறு உருண்டையாக எடுத்து வட்ட வடிவில் கட்லட் போன்று செய்து கொள்ள வேண்டும். பின்னர் தோசைக் கல்லின் மீது 2, 3 கட்லட் துண்டுகளை வைத்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.

பின்னர் இவற்றை பரிமாறிக் கொடுத்தால் போதும். இவற்றை குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிட்டு மகிழ்வார்கள். அதிலும் இதனுடன் தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் சேர்த்துக் கொடுத்து பாருங்கள். இன்னும் அருமையாக இருக்கும்.

- Advertisement -