இட்லி தோசைக்கு காரசாரமான வித்தியாசமான குழம்பு 10 நிமிடத்தில் தயார்? குறைந்த செலவில், அதிக சுவை!

thakali-kuzhambi
- Advertisement -

இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள வீட்டில் இருக்கும் வெங்காயம் தக்காளியை வைத்து, கொஞ்சம் தேங்காய் உடன் ஒரு ஸ்பெஷலான வித்தியாசமான குழம்பு எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பெருசா செலவு ஒன்னும் ஆகாது. செய்முறைக்கு சென்றுவிடுவோம். முதலில் 3 லிருந்து 4 தக்காளி பழங்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அரைத்த அந்த தக்காளி விழுதை ஒரு சிறிய கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

tomato-chutney1

அதே மிக்ஸி ஜாரில் 2 கைப்பிடி அளவு தேங்காய் துருவல், 3 ஸ்பூன் சாம்பார் பொடி, அல்லது இரண்டு ஸ்பூன் மிளகாய்தூள், 1 ஸ்பூன் தனியா தூள் சேர்த்து அந்த தேங்காயை தண்ணீர் ஊற்றி விழுதுபோல் அரைத்து வைத்தக் கொள்ளவேண்டும். சாம்பார் மிளகாய்த்தூள், குழம்பு மிளகாய்த்தூள், தனி மிளகாய் தூள் வரமல்லி தூள், உங்கள் வீட்டில் எந்த  பொடி உள்ளதோ அதை நீங்கள் இந்த குழம்புக்கு காரத்திற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், சோம்பு – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2 கீனியது, இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து வதக்கி, முதலில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை கடாயில் ஊற்றி, கொஞ்சமாக தண்ணீர் விட்டு இந்த இடத்தில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பை போட்டு கலந்து தக்காளியின் பச்சை வாடை போகும் வரை 3 நிமிடம் கொதிக்க வைத்தால் போதும்.

meen-kuzhambu2

அடுத்து அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை கடாயில் ஊற்றி, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து, மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் நன்றாகக் கொதிக்க வைத்து இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி பரிமாறுங்கள். இந்த தக்காளி குழம்பு கொஞ்சம் வித்தியாசமான சுவையில் காரசாரமாக சூப்பராக இருக்கும்.

- Advertisement -

இட்லி தோசை சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்  தேவைப்பட்டால் சுட சுட வெள்ளை சாதத்தில் போட்டுக் கலந்து சாப்பிட்டாலும் நன்றாகத்தான் இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்.

thakali-kuzhambi1

இந்த குழம்பு செய்வதற்கு அதிகமான பொருட்களை நாம் பயன்படுத்தப் போவதில்லை. வீட்டில் இருக்கும் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியமாக தேவைப்படும் சில பொருட்கள் இருந்தாலே போதும். உங்கள் பட்ஜெட்டுக்குள் இந்த குழம்பின் செலவு அடங்கிவிடும். லாக் டவுனில் பயனுள்ள குழம்பு தானே. ட்ரை பண்ணி பாருங்களேன்.

- Advertisement -