- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சிறு பருப்பை இப்படி செய்து குக்கரில் 3 விசில் விட்டு தாளிச்சு பாருங்க வித்தியாசமான சுவையுள்ள...

சிறு பருப்பை இப்படி செய்து குக்கரில் 3 விசில் விட்டு தாளிச்சு பாருங்க வித்தியாசமான சுவையுள்ள சாம்பார் ரெடி! எவ்வளவு இட்லி கொடுத்தாலும் பத்தாது.

- Advertisement -

இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சட்னி அரைத்து கொடுப்பதை விட குக்கரில் இரண்டு நிமிடத்தில் இப்படி ஒரு சாம்பார் வைத்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். பாசி பருப்பை கொண்டு செய்யப்படுகின்ற இந்த சாம்பார் ஆரோக்கியம் மிகுந்ததும் கூட! அட்டகாசமான, அலாதியான சுவையை கொடுக்கக் கூடிய இந்த சிறு பருப்பு சாம்பார் எப்படி எளிதாக செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

சிறுபருப்பு சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
சிறு பருப்பு – அரை கப், தக்காளி – 2, பரங்கிக்காய் – கால் கப், பச்சை மிளகாய் – 4, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், சமையல் எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், தண்ணீர் – 2 கப், கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பூண்டு பற்கள் – 2, உப்பு – தேவையான அளவு, வெல்லம் – ஒரு சிறு துண்டு, நெய் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

சிறுபருப்பு சாம்பார் செய்முறை விளக்கம்:
சிறுபருப்பு சாம்பார் செய்ய முதலில் அரை கப் அளவிற்கு சிறு பருப்பை எடுத்து நன்கு ஓரிரு முறை அலசி தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். பத்து நிமிடம் ஊறிய பின்பு ஒரு குக்கரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீரை வடித்து சிறு பருப்பை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் ரெண்டு தக்காளியை எடுத்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

பரங்கிக்காய் எனப்படும் மஞ்சள் பூசணிக்காயை தோல் சீவி அரை கப் அளவிற்கு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதனையும் இதனுடன் சேர்த்து, 4 பச்சை மிளகாய்களை போட்டுக் கொள்ளுங்கள். கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். இப்போது 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து மூன்று விசில் விட்டு எடுத்து பார்த்தால் பூ போல பருப்பு வெந்து இருக்கும். இப்போது மத்து போட்டு நைசாக கடைந்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்த பின்பு கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்தவுடன் சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு பூண்டு பற்களை தோலுரித்து ஒன்றிரண்டாக நசுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

இவரின் பச்சை வாசம் போக லேசாக வதக்கிய பின்பு நீங்கள் குக்கரில் இருக்கும் பருப்பை அப்படியே இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு உங்களுக்கு சாம்பாருக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். சாம்பார் கெட்டியாக கொதித்து வரும் பொழுது ஒரு ஸ்பூன் நெய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் அட்டகாசமான சாம்பார் தயார். ரொம்பவே அருமையான சுவையில் இருக்கும் இந்த சிறுபருப்பு சாம்பார் இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும். நீங்களும் இதே முறையில் ஒருமுறை செய்து பார்த்து அசத்தி விடுங்கள்.

சற்று முன்