சித்து விளையாட்டுக்களை செய்ய உதவும் எளிய மந்திரம்

amman-1

இறைவனை அடைவதற்கும், இறைவன் அருளை எளிதில் பெறுவதற்கும், இறைவன் அருளால் பல அறிய சக்திகளை பெறுவதற்கும் சித்தர்களாலும் முனிவர்களாலும் கண்டறியப்பட்ட பல மந்திரங்கள் இன்று உள்ளன. அதில் சித்து விளையாட்டை எளிதில் கற்க உதவும் மிக சிறிய மந்திரம் ஒன்று உள்ளது. அந்த மந்திரம் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

siddhargal

மந்திரம்:
ஓம் அம் நம

இந்த மந்திரத்தை முறையாக ஜெபிப்பதனால் சித்தர்களின் மூலம் சித்து விளையாட்டை கற்கும் வழி பிறக்கும். அதன் பின் சித்து விளையாட்டுகளை நாம் எளிதில் செய்யலாம். தமிழ் மொழியின் சக்தியை உணர்தவர்களுக்கு அதில் உள்ள பல மந்திர ஆற்றல்களின் சக்தியும் புரிந்திருக்கும். ஓம் என்ற பிரணவ மந்திரத்தோடு, தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்களோடு “ம்”, “ங்” போன்ற எழுத்துகளை(பீஜங்கள்) சேர்த்து சரியான முறையில் உச்சரிக்கையில் அது சக்தி பெறுகிறது என்று பிருகு முனிவர் கூறுகிறார். அந்த வகையை சார்ந்ததே மேலே உள்ள மந்திரம். ஒரு மனிதன் சித்திகளை பெற “ம்” பீஜம் உதவுகிறது. “ங்” பீஜம் முக்தியை பெற உதவுகிறது.

“ங்” பீஜம் மந்திரம்:

ஓம் அங் நம – இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் முக்தியை பெறுவதற்கான ஞானம் கிடைக்க வழிபிறக்கும். இது போன்ற மந்திரங்களை காலை பிரம்ம முகூர்த்த வேலையில் ஒரு லட்சம் முறை ஜபித்தால் அதற்கான பலன்களை பெறலாம்.

இதையும் படிக்கலாமே:
நம்மில் இருக்கும் தேஜஸ் ஒளிர உதவும் தட்சிணாமூர்த்தி மந்திரம்

English Overview:
There are many mantras in this world but Tamil language itself a kind of mantra. It has enormous power in it. We just need to add “im”, “ing” letters to few other letters in Tamil language to make it as perfect mantra. Above given sithu vilayattu manthiram in Tamil.