நம்மில் இருக்கும் தேஜஸ் ஒளிர உதவும் மந்திரம்

1281
Thejas Mantra
- விளம்பரம் -

மனிதர்களுக்குள் எண்ணற்ற ஆற்றல்கள் ஒளிந்துள்ளன. அவை அனைத்தையும் முறையாக வெளிப்படுத்த தெரிந்தவர்கள் ஞானி ஆகிறார்கள். அந்த வகையில் நமக்குள் ஒளிரக்கூடிய ஒரு அற்புதமான ஆற்றலை தான் தேஜஸ் என்று முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். தேஜஸ் என்பது முன் ஜென்பதில் நாம் பெற்ற பயனால் வரக்கூடியது ஒரு சக்தி. முன் ஜென்மத்தில் இறை வழியை பின்பற்றியவர்களுக்கு இந்த ஜென்மத்தில் தேஜஸ் ஆற்றல் கிடைக்கிறது. ஆனால் சில மந்திர சக்திகள் மூலம் அனைவரும் அதை பெற ரிஷிகளும் முனிவர்களும் உதவி உள்ளனர். நமக்குள் இருக்கும் தேஜஸ் வெளிப்பட, குரு தட்சிணாமூர்த்தியை வணங்கி கீழ் காணும் மந்திரம் அதை ஜபிக்கலாம்.

guru

குரு தட்சிணாமூர்த்தி மந்திரம்:
ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம்
ப்ரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா

- Advertisement -

மனிதர்களுக்கு எண்ணிலடங்கா பல அறிவாற்றங்கள் உள்ளன. நடக்கப்போவதை முன் கூட்டியே அறியக்கூடிய ஆற்றானால முன்னறிவு, நமது வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் மூலம் பாடம் கற்கும் பின்னறிவு, தொழிலுக்கு உகந்த நுண்ணறிவு இப்படி பல விதமான அறிவுத்திறன் மனிதர்களிடம் கொட்டி கிடக்கின்றன. ஆனால் இவை அனைத்தையும் அனைவரும் வெளிப்படுத்துவது கிடையாது. நமக்குள் இருக்கும் தேஜஸ் மற்றும் அனைத்து விதமான அறிவுத்திறன்கள் வெளிப்பட மேலே உள்ள மந்திரம் அதை முறையாக தினமும் 108 முறை ஜபித்து வர நமக்குள் இருக்கும் ஆற்றல் வெளிப்பட துவங்கும். சிவா வடிவமான குரு தட்சிணாமுர்த்தியை மனதில் நிலை நிறுத்தி இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும். குரு மூலம் இந்த மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிப்பது மேலும் சிறப்பு சேர்க்கும்.

இதையும் படிக்கலாமே:
ஆயுள் பலத்தை அதிகரிக்கும் மந்திரம்

English Overview:
Here we have Lord Dakshinamurthy slokam in Tamil. By chanting this slokam one can increase their in build thejas power. This mantra needs to be chanted on daily basis up to 108 times to get full benefits.

Advertisement