வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்ட 1100 ஆண்டுகள்பழமையான அதிசய லிங்கம். ஆச்சர்யப்படும் ஆய்வாளர்கள்.

Lingam
- Advertisement -

நமது பாராத நாடு ஆன்மீகத்திற்கு பெயர்போன நாடு என்பதை உலகம் அறியும். அதே போல இந்த பாரத திருநாட்டில் இருந்து தான் மக்கள் உலகம் முழுக்க பரவினர் என்பது குறித்த சில ஆய்வு கட்டுரைகளும் அவ்வப்போது சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதை மெய்ப்பிக்கும் வகையில், வியட்நாமில் தற்போது 1100 வருடம் பழைமையான சிவ லிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பாப்போம் வாருங்கள்.

Agalvaivu

இந்திய தொல்பொருள் ஆய்வு மையமான ஏ.எஸ்.ஐ வியட்நாமில் நடத்திய அகழ்வாய்வில் இந்த லிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ளது இந்த லிங்கம் 1100 வருடங்கள் பழமையானது.

- Advertisement -

மத்திய வியட்நாமில் உள்ள மை சன் என்னும் பகுதியில் ” சாம் கோயில்” என்றொரு கோவில் உள்ளது. தற்போது சற்று பாழடைந்த நிலையில் உள்ள இந்த கோவிலானது கெமர் பேரரசின் மன்னரான இரண்டாம் இந்திரவர்மனின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

Lingam

தென் இந்தியாவின் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் இந்த கோவில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் சில காலமாக இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஆந்த ஆய்வின் ஒரு பகுதியாக தற்போது கி.பி 9ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பழங்காலத்தில் இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் சைவ சமயத்தை பின்பற்றினர் என்றும், அவர்கள் கட்டிடக்கலையில் சிறந்து விளங்கினார் என்று கூறப்படுகிறது. அதோடு அவர்கள் இந்தியா, ஆபிரிக்கா, சீனா, மலேசியா, தைவான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளோடு வர்த்தக தொடர்பில் ஈடுபட்டுள்ளனர் என்று அறியப்படுகிறது.

Temple

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், இந்த கண்டுபிடிப்பானது இந்திய கலாச்சாரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அதோடு இந்தியா மற்றும் வியட்நாம் இடையேயான நாகரீக இணைப்பை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது என்று அவர் கூறியுள்ளார். அதோடு அவர் இந்திய தொல்பொருள் ஆய்வு மையமான ஏ.எஸ்.ஐ யை பாராட்டியுள்ளார்.

- Advertisement -