கன்னியாகுமாரி கடல் ஓரத்தில் வெளிப்பட்ட அதிசய சிவ லிங்கம் – வீடியோ

Siva lingam

ஆதிகாலம் முதலே தமிழர்கள் சிவனை முழு முதற் கடவுளாக வழிபட்டு வந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. முதலாம் தமிழ் சங்கத்தில் சிவபெருமான் புலவர்களோடு உரையாடிய குறிப்புக்கள் பல உள்ளன. இது போன்றவைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் கன்னியாகுமாரி கடல் ஓரத்தில் பாறையோடு ஒட்டியவாறு ஒரு அபூர்வ சிவலிங்கம் உள்ளது. இதோ அதன் வீடியோ காட்சி.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

இந்த சிவ லிங்கமானது எந்த காலகட்டத்தை சேர்ந்தது?. இங்கு இதற்கு முன்பு ஏதேனும் கோவில் இருந்து அது கடலில் மூழ்கி உள்ளதா போன்ற தகவல்கள் நமக்கு தெரியவில்லை. ஆனால் இந்த சிவ லிங்கம் கடல் நீரில் உள்ள பாறையோடு ஒட்டியபடி அற்புதமாக காட்சி அளிப்பது நம் பக்தியை அதிகரிக்கிறது.

Siva lingam

மேலே உள்ள வீடியோ பதிவை எடுத்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. தற்சமயம் அந்த சிவலிங்கத்தில் உள்ள பாறையானது மண்ணில் புதைந்து வெறும் லிங்கம் மட்டுமே வெளியில் தெரிகிறது. அதன் புகை படம் தான் மேலே இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அந்த லிங்கமும் சில வருடங்களில் மண்ணில் புதைந்து விடும் என்பதே உண்மை. ஆகையால் இந்த சிவ லிங்கம் ஒரு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டால் சிறப்பாக இருக்கும்.