குடம் குடமாக அபிஷேக எண்ணெயை உறிஞ்சும் அதிசய சிவ லிங்கம்

Sivan

நம் பாரத திருநாட்டில் உள்ள கோவில்களில் நடக்கும் அதிசயங்களை காண கண் கோடி வேண்டும். அந்த வகையில் எவ்வளவு எண்ணெயை ஊற்றினாலும் அதை அப்படியே தன்னுள் உறிஞ்சிக்கொள்ளும் ஒரு அதிசய சிவ லிங்கத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

sivan temple

தஞ்சை மாவட்டம் திருநீலக்குடியில் உள்ளது நீலகண்டேஸ்வரர் திருக்கோவில். இங்குள்ள சிவனுக்கு நல்லெண்ணெய் கொண்டு பிரத்யேகமாக அபிஷேகம் நடக்கிறது. தினமும் பாத்திரம் பாத்திரதமாக எவ்வளவு எண்ணெயை ஊற்றினாலும் அவ்வளவு எண்ணெயையும் இங்குள்ள சிவ லிங்கம் தன்னுள்ள உறிஞ்சிக்கொள்கிறது.

அடுத்தநாள் மீண்டும் அபிஷேகம் செய்வதற்கு முன்பு சிவ லிங்கத்தை பார்த்தால், பல வருடங்களாக எண்ணெயே தடவாதது போல் மிகவும் வறண்டு காணப்படுகிறது சிவ லிங்கத்தின் திருமேனி.

sivan

நாள் முழுக்க பாத்திரம் பாத்திரமாக ஊற்றப்படும் எண்ணெயை சிவலிங்கம் எப்படி உறிஞ்சுகிறது? உறிஞ்சப்படும் எண்ணெய் என்ன ஆகிறது ? இப்படி எந்த கேள்விகளுக்குமான விடையும் இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.

sivan

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வந்த நஞ்சை சிவன் உண்ட கதை நமக்கு தெரியும். அந்த நஞ்சின் விஷத்தன்மையை குறைக்கவே இந்த கோவிலில் இப்படி ஒரு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம்.