பிரதோஷ தினத்தன்று அனைவரும் சிவபெருமானை வழிபாடு செய்வோம். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய தோஷங்களும், குற்றங்களும், கஷ்டங்களும் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமையில் வரக்கூடிய பிரதோஷ தினத்தில் சிவபெருமானை நாம் வழிபாடு செய்வதன் மூலம் பணரீதியாக ஏற்பட்டிருக்கக் கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட பணப் பிரச்சினையை நீங்கவும் பணவரவு அதிகரிக்கவும் சொல்லக் கூடிய ஒரு மந்திரத்தைப் பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். செவ்வாய் கிழமை என்றாலே அது செவ்வாய் பகவானுக்குரிய கிழமையாக திகழ்கிறது. இந்த செவ்வாய்க்கிழமையில் நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் நம்முடைய கடன் பிரச்சினையை தீர்க்க உதவும்.
அப்படிப்பட்ட செவ்வாய்க்கிழமை ஆன இன்று பிரதோஷமும் சிவராத்திரியும் இணைந்து வருகிறது.அதனால் இதற்கு கூடுதல் சிறப்பு பலன்கள் கிடைக்கும். இன்றைய தினத்தில் நாம் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த சிறப்பு மிகுந்த நாளை நாம் மறவாமல் உபயோகப்படுத்திக் கொண்டால் கண்டிப்பான முறையில் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பண ரீதியான பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் பணவரவு அதிகரிக்கும்
பண வரவு அதிகரிக்க சிவ மந்திரம்
பண வரவை அதிகரிக்க கூடிய தெய்வமாக திகழக்கூடியவர்கள் மகாலட்சுமி தாயாரும் குபேர பகவானும் தான். ஒரு காலத்தில் மகாலட்சுமி தாயாரிடம் இருந்த அனைத்து விதமான செல்வங்களும் ஏதோ ஒரு சூழ்நிலையில் அவர்களை விட்டு நீங்கி விட்டது. அந்த சமயம் மகாலட்சுமி தாயார் ஒரு வில்வ மரமாக உருவெடுத்து சிவபெருமானின் நினைத்து தியானம் செய்தார்களாம்.
அப்படி தியானம் செய்ததால் சிவபெருமானின் அருளை பெற்று இழந்த அனைத்து விதமான ஐஸ்வரியங்களையும் திரும்பப்பெற்றதாக புராணங்கள் கூறுகிறது. அப்படி அனைத்து ஐஸ்வர்யங்களையும் தந்த சிவபெருமானை ஐஸ்வரேஸ்வரர் என்று கூறுவோம். அதனால் நமக்கு பணப்பிரச்சினை தீர வேண்டும், மகாலட்சுமி தாயாரின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் சிவபெருமானை வழிபட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
சிவபெருமானை வழிபடுவதற்குரிய சிறப்பு மிகுந்த நாளாக பிரதோஷமும் சிவராத்திரியும் திகழ்கிறது. இந்த பிரதோஷமும் சிவராத்திரியும் ஒரு சேர இன்று வந்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் கடனுக்கு அதிபதியாக திகழக்கூடியவராக இருப்பவர் செவ்வாய் பகவான். அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்குரிய தினமான செவ்வாய்க்கிழமை அன்று இந்த பிரதோஷமும் சிவராத்திரியும் சேர்ந்து வருவதால் இன்றைய தினம் மிகவும் சிறப்புக்குரிய தினமாக திகழ்கிறது.
இன்றைய தினத்தில் சிவபெருமானை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய கடன் ரீதியான பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். இந்த மந்திரத்தை நாம் உச்சரிப்பதற்கு இன்றைய தினம் அசைவத்தை தவிர்த்து இருக்க வேண்டும். வேறு எதுவும் தேவையில்லை. இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு காலம் நேரம் எதுவும் இல்லை. எந்தவித பூஜையும் கிடையாது. கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இரவு படுக்க செல்வதற்கு முன்பாக வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து ஒரே ஒருமுறை இந்த மந்திரத்தை கூறினால் போதும். சிவபெருமானின் அருளால் பணம் சேர்வதற்குரிய வழிகள் நமக்கு கிடைக்கும்.
அந்த வழிகளை நம் முறையாக உபயோகப்படுத்திக் கொண்டோம் என்றால் கண்டிப்பான முறையில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். பணவரவு அதிகரிப்பதால் கடன் பிரச்சனை முற்றிலும் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும். முழு நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
“ஓம் நமோ சிவாய சர்வ குபேர வசி வசி ஓம்”
எப்படி மகாலட்சுமி தாய் சிவபெருமானிடம் இருந்து ஐஸ்வர்யங்களை பெற்றார்களோ அதே போல் தான் குபேரரும் சிவபெருமானிடம் இருந்து செல்வங்களை பெற்றார் என்று புராணங்கள் கூறுகிறது. இந்த மந்திரத்தை நாம் உச்சரிப்பதன் மூலம் சிவபெருமானின் அருளையும் அதேசமயம் குபேரரின் அருளையும் ஒருசேர பெறுவோம்.
குபேர பகவானுக்கு செல்வத்தை வாரி வழங்கிய சிவபெருமானின் மந்திரம் என்பதால் குபேர பகவானும் நமக்கு அருள் புரிவார், சிவபெருமானும் நமக்கு அருள் புரிவார். இவர்கள் இருவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்துவிட்டால் நம்முடைய பணரீதியான பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். பணவரவு அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே: பதினாறு செல்வங்களையும் பெற வெந்தய பரிகாரம்
இந்த ஒரு வரி மந்திரத்தை முழு நம்பிக்கையுடன் முழு மனதுடன் சொல்பவர்களுடைய வாழ்க்கையில் சிவபெருமானின் அருளால் பண மழை பொழியும் பண பிரச்சனை தீரும்.