- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஉங்கள் ராசி படி சிவனுக்கு சமர்ப்பிக்க வேண்டிய அபிஷேக பொருட்கள்.

உங்கள் ராசி படி சிவனுக்கு சமர்ப்பிக்க வேண்டிய அபிஷேக பொருட்கள்.

- Advertisement -

வாழ்நாள் துன்பங்கள் எல்லாம் ஒரே நாளில் சரியாக வேண்டும் என்பவர்கள் தவறாமல் இன்று அந்த ஈசனை வழிபாடு செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் பின்தொடரும் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சரி, அதை சரி செய்வதற்கு இதை விட உகந்த நாளும், கிழமையும் உங்களுக்கு கிடைக்காது. இன்று சனி மகா பிரதோஷம். “ஓம் நமசிவாய” மந்திரத்தை சொல்லுவோம், இந்த மந்திரத்தை நீங்களும் உங்கள் வாயால் சொல்ல, உங்களுக்கும் கோடி புண்ணியம்.

உங்களை இந்த மந்திரத்தை சொல்ல வைத்த எனக்கும் கோடி புண்ணியம் வந்து சேரும். உங்களுடைய ராசி என்ன, உங்கள் ராசி படி நீங்கள் இன்றைய தினம் ஈசனுக்கு என்ன அபிஷேக பொருளை வாங்கி கொடுத்தால், உங்களுடைய துன்பங்கள் தீரும். 12 ராசிக்காரர்களுக்கும் உண்டான அபிஷேகப் பொருட்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா .

- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று சிவபெருமானுக்கு பன்னீர் சந்தனம் இந்த இரண்டு பொருட்களை அபிஷேகத்திற்கு வாங்கிக் கொடுங்கள். சந்தனம் மிக குறைந்த அளவு வாங்கி கொடுத்தாலும் சுத்தமான சந்தனமாக இருக்க வேண்டும். பன்னீர் வாசம் நிறைந்த சுத்தமான பன்னீராக இருக்கட்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று சிவபெருமானுக்கு சுத்தமான பசும்பால் சுத்தமான நெய் வாங்கிக் கொடுப்பது சிறப்பான பலனை தரும். நீங்கள் குடிப்பதற்கு பாக்கெட் பால் வாங்கினாலும் சரி, கொஞ்சம் தேடி கண்டுபிடித்து பசும்பாலை வாங்கி எப்படியாவது இன்று சிவன் கோவிலுக்கு கொடுத்து விடுங்கள். நிச்சயம் உங்கள் பிரச்சனைகள் தீரும்.

- Advertisement -

மிதுனம்

இன்று சிவபெருமானுக்கு நீங்கள் கரும்புச் சாறு வாங்கிக் கொடுத்து அபிஷேகம் செய்தால் தீயாய் எறிந்து கொண்டிருக்கும் பிரச்சனை அப்படியே தனியும்.

கடகம்

கடக ராசி காரர்கள் சுத்தமான சந்தன கட்டை வாங்கி அதை கோவிலில் அமர்ந்து, நன்றாக இழைத்து அந்த சந்தனத்தை சிவனுக்கு அபிஷேகம் செய்ய கொடுக்க உங்களுடைய துன்பங்கள் எல்லாம் இன்றோடு அடியோடு தீரும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று மஞ்சள் நிறத்தில் இருக்கும் பொருட்களை ஈசனுக்கு வாங்கி கொடுங்கள். மஞ்சள் நிற பூ, மஞ்சள் நிற வஸ்திரம், கிழங்கு மஞ்சள் இப்படி மஞ்சள் நிறத்தில் எந்த பொருளை வேண்டும் என்றாலும் ஈசன் கோவிலுக்கு நீங்கள் இன்று வாங்கிக் கொடுக்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் சிவன் கோவிலில் பிரசாதம் செய்ய வெல்லம் வாங்கி தானம் கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். வாசம் நிறைந்த தூபம், சிவன் கோவிலில் போடுவார்கள். அதற்கு சாம்பிராணி தூபப்பொடி அல்லது கம்ப்யூட்டர் சாம்பிராணி அல்லது ஊதுபத்தி இதுபோல ஏதாவது மனம் நிறைந்த பொருட்களை சிவன் கோவிலுக்கு வாங்கிக் கொடுக்கவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று ஈசனுக்கு பசும்பால் தயிர் இந்த இரண்டு பொருட்களை வாங்கி அபிஷேகத்திற்கு கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். முடிந்தால் தயிர் சாதம் செய்து கூட ஈசனுக்கு நீங்கள் பிரசாதமாக நெய்வேத்தியம் வைக்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்கள் இன்று ஈசனுக்கு வில்வ இலைகளை உங்கள் கையால் மாலையாக கட்டிப் போடுவது சிறப்பான பலனை கொடுக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று ஈசனுக்கு மஞ்சள் நிற பொருட்கள், மஞ்சள் நிற வஸ்திரம் வாங்கி தானம் கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். எதுவுமே கிடைக்கவில்லை என்றால் மஞ்சள் நிற பூக்களை மட்டும் ஆவது வாங்கி ஈசனுக்கு கொடுத்து விடுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று ஈசனுக்கும் நல்லெண்ணெய், நெய் வாங்கி அபிஷேகத்திற்கு தானம் கொடுப்பது சிறப்பு. சுத்தமான மரச்செக்கு நல்லெண்ணெய் 200 மில்லி வாங்கி கொடுத்தால் கூட போதும். ஆனால் சுத்தமான எண்ணெய் தானம் செய்யுங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று நந்தி பகவானுக்கு உங்கள் கையால் காப்பரிசை தயார் செய்து எடுத்துக்கொண்டு செல்லுங்கள். அதை நந்திக்கு நெய்வேத்தியம் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு உங்கள் கையால் தானம் கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் உங்களால் முடிந்த வாசனை திரவியங்களை வாங்கி ஈசனுக்கு தானமாக கொடுக்கலாம். பன்னீர், சாம்பிராணி தூபம் போட தேவையான பொருட்கள், ஊதுவத்தி இது போன்ற பொருட்களை ஈசனுக்கு கொடுங்கள். இதுபோக இளநீர் வாங்கி அபிஷேகத்திற்கு கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்களையும், தோஷங்களையும் நீக்கும் சனி மகா பிரதோஷ பரிகாரம்

இறைவனைப் பொறுத்தவரை உங்கள் சக்திக்கு மனதார நீங்கள் எந்த பொருளை வாங்கி கொடுத்தாலும் அவன் அதை நிறைவோடு ஏற்றுக்கொள்வான். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இன்று சனி மகா பிரதோஷம். உங்களுடைய ராசிக்கு ஏற்ப இந்த பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுத்தால் வாழ்வில் நல்லது நடக்கும் என்பது ஜோதிடர்களின் கருத்து. உங்களுக்கும் இதில் நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்