சிவனையே வசமாக மடக்கிய பக்தன் – உண்மை சம்பவம்

sivanl

ஒரு ஊரில் மிக சிறந்த சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவர் பெயர் அச்சுதகளப்பாளர். சிவனை தினமும் துதித்து வந்த அவருக்கு வெகு நாட்களாக பிள்ளை வரம் இல்லை. அதனால் அவரும் அவரின் மனைவியும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். ஒரு நாள் இதுகுறித்து அவர் தன் குருநாதரான அருள்நந்தி சிவாச்சாரியாரிடரிடம் வினவினார்.

munivar

இந்த காலத்தில் எப்படி ஒருவருடைய கைரேகையை வைத்து அவருடைய பிறப்பின் ரகசியங்களை அறியமுடிகிறதோ அது போல அந்த காலத்தில் “கயிறு சாத்துதல்” என்றொரு முறை இருந்தது. இந்த முறையின் மூலம் தன் சீடனுக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா என்பதை அவர் கண்டறிய முடிவெடுத்தார்.

நாயன்மார்கள் மீது மிகுந்து நம்பிக்கை கொண்ட அருள்நந்தி, அவர்கள் எழுதிய பன்னிரு திருமுறைகளை சிவன் முன் வைத்து அதில் கயிறுபோட்டு பார்த்தார். அதில் சம்பந்தர் பாடிய திருவெண்காட்டுப்பதிகம் வந்தது. உடனே தன் சீடனிடம், இந்த பதிகத்தை தினமும் நீ கூறிவருவதன் பயனாக உனக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று கூறினார்.

munivar

தன் குருநாதர் கூறியதை அப்படியே உள்ளத்தில் வாங்கிக்கொண்ட அச்சுதகளப்பாளர், தினமும் சிவனை நினைத்து திருவெண்காட்டு பதிகத்தை பாடிவந்தார். ஒரு நாள் இரவு அச்சுதகளப்பாளரின் கனவில் வந்த சிவன், “நீ என்னை நினைத்து மனமுருகி பதிகம் பாடுவது என்னை மகிழ்விக்கிறது. ஆனால் உன் விதி படி உனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் உனக்கு என்னால் குழைந்தை வரத்தை அருள இயலாது என்றார்”.

munivar

இதை கேட்டு அதிச்சி அடைந்த அச்சுதகளப்பாளர், இறைவா, என்னுடைய பூர்வ ஜென்ம பாவ வினைகளால் எனக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகலாம் ஆனால் உங்களின் பூரண அருள் பெற்ற சம்பந்தரின் வாக்கும், உங்கள் மீது தீரா பக்திகொண்ட என் குருநாதரின் வாக்கும் பொய்யாகலாமா என்று வினவினார். இந்த நியாயமான கேள்வியில் மாட்டிக்கொண்ட சிவன் அவருக்கு பிள்ளை வரத்தை அளித்து அவரை மகிழ்வித்தார். அந்த பிள்ளையின் பெயர் தான் மெய்கண்டார். அவரே ‘சிவஞானபோதம்’ என்னும் அரிய நூலை இந்த உலகத்திற்கு அளித்தவர்.

இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான தமிழ் கதைகள் மற்றும் ஆன்மீக தகவல்களை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்யுங்கள். நன்றி