சிவனையே ஆட்டம் காணவைத்த பக்தன் – சிறு கதை

0
1632
sivan
- விளம்பரம் -

ஒரு ஊரில் வயதான சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். சிவனின் பரிபூரண அருள் அவருக்கு இருந்தும் கூட எந்த வித பெருமிதமும் இன்றி மிக எளிமையாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள் தன்னுடைய குடிசையின் அமர்ந்து கொண்டு கிழிந்த தன் துணியை தைத்துக்கொண்டிருந்தார்.

munivar

இது ஒருபுறம் இருக்க, சிவனும் பார்வதி தேவியும் உலக மக்களின் நிலை அறிய வான் வெளியில் வளம் வந்துகொண்டிருந்தனர். அப்போது பார்வதி தேவி அந்த வயதான சிவ பக்தரை கண்டார். உடனே சிவனிடம் அவரை காண்பித்து, ஐயனே இவருக்கு நாம் ஏதாவது வரம் வழங்க வேண்டும் என்றார். அவரை பார்த்த சிவன், அவன் அந்த நிலையை எல்லாம் கடந்து விட்டான் தேவி. நாம் நமது பயணத்தை தொடரலாம் என்றார். ஆனால் பார்வதி தேவி அவரை விடவில்லை.

Advertisement

ஒருவழியாக சிவனை அழைத்துக்கொண்டு அந்த பக்தனை காண பார்வதி தேவி வந்தார். இவர்களை கண்டதும் அந்த வயதான பக்தர் மனம் மகிழ்ந்தார். தன்னுடைய குடிலில் அமரவைத்து தாகத்திற்கு மோர் கொடுத்தார். பின் தான் செய்துகொண்டிருந்த உடை தைக்கும் பணியை அவர் மீண்டும் தொடங்கினார்.

munivar

சில நிமிடங்கள் இப்படியே சென்றது, உடனே பார்வதி தேவி தன் கண்களால் சிவனிடம் சைகை செய்ய உடனே சிவபெருமான் தன் பக்தனிடம், நாங்கள் விடைபெறுகிறோம் என்றார். தங்களின் வருகை எனக்கு சந்தோசத்தை தந்தது. மகிழ்ச்சியாய் நீங்கள் சென்றுவாருங்கள் என்று கூறிவிட்டு மீண்டும் தன் பணியை அவர் தொடர்கிறார்.

பார்வதி தேவி மீண்டும் சிவனிடம் சைகை செய்ய உடனே சிவன், பக்தா நாங்கள் இருவரும் யாருக்கேனும் காட்சி அளித்தால் அவருக்கு வரங்களை தருவது எங்கள் வழக்கம். ஆகையால் உனக்கு தேவையான வரத்தை நீ கேள் நாங்கள் தந்து விட்டு செல்கிறோம் என்றார். இதை கேட்டு புன்னகைத்த அந்த முதியவர், நீங்கள் இப்படி கேட்டதே மகிழ்ச்சி ஆனால் எனக்கு எந்த வரமும் வேண்டாம் நீங்கள் உங்கள் பயணத்தை தொடருங்கள் என்றார்.

sivan

பார்வதி தேவி விடுவதாக இல்லை. நீங்கள் ஏதாவது வரம் கேட்கத்தான் வேண்டும் என்றார். சரி நீங்கள் இவ்வளவு வற்புறுத்துவதால் நான் ஒரு வரம் கேட்கிறேன் என்ற அந்த முதியவர், நான் இந்த உடையை தைக்கும் சமயத்தில் எப்போதும் ஊசியின் பின் நூல் வர வேண்டும் என்றார். இதை கேட்டு திகைத்த சிவனும் பார்வதி தேவியும், இப்போதே அது அப்படி தானே நடக்கிறது என்று கூறினார்கள்.

இதையும் படிக்கலாமே:
கேட்டதை கொடுக்கும் காமதேனு மந்திரம்

அதற்கு அந்த முனிவர், ஊசியில் நூல் கோர்த்து தைக்கும்போது ஊசிக்கு பின் நூல் செல்வது இயல்பான விடயமே அதே போல தான் நான் செய்யும் செயல்கள் மூலம் எனக்கு வர வேண்டிய பலன்கள் தானாக வரும். நான் நல்லது செய்தால் நல்லது வரும் கெட்டது செய்தால் கெட்டது வரும். நான் நல்லதை மட்டுமே செய்கிறேன் என்று நம்புகிறேன். இதற்கிடையில் எனக்கு எதற்கு இந்த வரம் என்றார். இந்த விளக்கத்தை கேட்ட சிவனும் பார்வதி தேவியும் புன்முறுவல் புரிந்தவாறு அங்கிருந்து சென்றனர்.

இது போன்ற மேலும் பல ஆன்மீக கதைகள், தமிழ் சிறுகதைகள் மற்றும் ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

Advertisement