கைலாயத்தில் தோன்றிய சிவனின் உருவம் – படம் பிடித்த கூகிள் மேப்

sivan-in-kailayam7

கூகிள் மேப் என்பது உலகில் உள்ள அனைத்து இடங்களையும் புகைப்படம் எடுத்து அதை சாட்டிலைட் வழியாக மக்களின் பயன்பாட்டிற்கு கொடுக்கும் ஒரு நவீன தொழில்நுட்பம். அதிகப்படியாக இது ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எந்த வழியில் செல்வது சிறந்தது என்பதை கண்டறியவே பயன்படுகிறது. அதே போல ஒரு இடத்தை தேர்வு செய்து அதை ஜூம் செய்து பார்த்தால் அந்த இடத்தில் என்ன இருக்கிறது என்பதை ஓர் அளவிற்கு இதன் மூலம் கண்டறியலாம்.

sivan in kailayam

சிவ பக்தர்கள் பலர் சிவன் வாழும் கைலாய மலையை கூகிள் மேப் வழியாக பார்த்து அவ்வப்போது பரவசமடைவது வழக்கம். அதுபோல வட இந்தியாவை சேர்ந்த ஒருவர் ஒரு நாள் கூகிள் மேப் வழியாக கைலாயத்தை காண்கயில் அதில் சிவனின் உருவம் தென்பட்டதை அடுத்து அவர் மிகவும் பரவசம் அடைந்துள்ளார்.

இது பற்றி அவர் பதிவிடுகையில் , நான் அவ்வப்போது கைலாய மலையை கூகிள் மேப் வழியாக பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். வழக்கம் போல ஒரு நாள் நான் கூகிள் மேப்ஐ ஓபன் செய்து கைலாயத்தை பார்க்கையில் அதில் சிவன் வடிவம் தெள்ள தெளிவாக பதிவாகி இருந்தது.

sivan in kailayam

பக்தி பரவசத்தில் எனக்கு அந்த சமயத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. உடனே நான் அந்த காட்சியை புகைப்படம் எடுத்துக்கொண்டேன். நான் கண்ட காட்சியை இந்த உலக மக்கள் அனைவரும் காணவேண்டும் என்று விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

sivan in kailayam

இதையும் படிக்கலாமே:
ஐயப்பனுக்கு எதற்காக நெய் தேங்காய் கொண்டு செல்கிறோம் தெரியுமா ?

பகுத்தறிவாளர்கள் பலர் இது ஏதோ எதேச்சையாக காணப்படும் உருவமே தவிர இது சிவன் கிடையாது என்று கூறுகின்றனர். ஆனால் ஆன்மீகவாதிகள், இது நிச்சயம் சிவனின் உருவம் தான் என்று அடித்து கூறுகின்றனர். இது குறித்து பல வீடியோ பதிவுகளும் யுடியூபில் வளம் வருகின்றன.