ஐயப்பனுக்கு எதற்காக நெய் தேங்காய் கொண்டு செல்கிறோம் தெரியுமா ?

- Advertisement -

ராஜசேகரன் என்னும் பந்தள அரசன் ஐயப்பனை பம்பா நதி அருகே கண்டெடுத்து வளர்ப்பு மகனாக வளர்த்தார். அரசனும் அரசியும் ஐயப்பனை வளர்ப்பு மகனாக பாராமல் தங்கள் சொந்த பிள்ளையாகவே பாவித்து வளர்த்தனர். நாட்கள் உருண்டோடின அரசனுக்கும் அரசிக்கும் வேறொரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்த பிறகு அரசிக்கு ஐயப்பன் மீது இருந்த பாசம் குறைந்தது.

அதன் பிறகு ஒரு கட்டத்தில் பந்தள அரசன் ஐயப்பனுக்கு இளவரசன் பட்டம் சூட்ட முடிவெடுத்தார். இதை தாங்கிக்கொள்ள முடியாத அரசி, ஐயப்பனை பெரும் பிரச்னையில் சிக்கவைப்பதற்காக, தனுக்கு உடலை இல்லை சரி இல்லாதது போல நாடகமாடி ஐயப்பனை புலிப்பால் கொண்டுவர சொல்லி காட்டிற்கு அனுப்பினார்.

- Advertisement -

காட்டிற்கு சென்ற ஐயப்பன் அங்கு தேவர்களுக்கு வெகு காலமாக தொல்லை கொடுத்த மகிஷி என்னும் அரக்கியை வீழ்த்தினார். அந்த அரக்கியை வீழ்த்துவதே ஐயப்பனின் அவதார நோக்கமாக இருந்தது. இதனை கண்ட தேவர்கள் புலியாக மாறி ஐயப்பனோடு சேர்ந்து வந்தனர். இதை கண்ட அரசி ஐயப்பன் கடவுளின் அவதாரம் என்பதை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்டார். அதன் பின் புலிகளை ஐயப்பன் மீண்டும் காட்டிற்கு அனுப்பினார்.

தன்னுடைய அவதார நோக்கம் முடிவதைந்த காரணத்தினால் ஐயப்பன் சபரி மலைக்கு சென்று தவமிருக்கப்போவதாக கோரி அனைவரிடமும் விடைபெற்று சென்றார். அதன் பிறகு ஐயப்பனை அவ்வவ்போது காண விரும்பிய பந்தள அரசன் அவருக்காக பலகாரங்களை செய்துகொண்டு சபரி மலைக்கு சென்று ஐயப்பனை சந்தித்து வந்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
அமாவாசை நல்ல நாளா ? கெட்ட நாளா ? – ஒரு ஆன்மீக ஆய்வு

தான் வசித்த இடத்தில் இருந்து சபரி மலை வெகு தொலைவில் இருந்ததால் அவர் சில நாட்கள் பயணம் செய்ய வேண்டி இருந்தது. அப்போது தான் கொண்டு செல்லும் பலகாரங்கள் கெட்டுவிட கூடாது என்பதற்காக பெரும்பாலும் நெய் பலகாரங்களையே அவர் கொண்டு சென்றார். இந்த வழக்கமே பிற்காலத்தில் ஐயப்ப பக்தர்கள் அவருக்காக நெய் தேங்காயை கொண்டு செல்ல காரணமாக இருந்தது.

- Advertisement -