உறங்கும் நிலையில் இருக்கும் இவர் விஷ்ணு இல்லை சிவன் என்பது தெரியுமா ?

0
5412
sivan
- விளம்பரம் -

பொதுவாக நாம் உறங்கும் நிலையில் இருக்கும் கடவுளை பார்த்தால் அவர் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் தான் என்று நினைத்து வழிபடுவதுண்டு. அனால் ஆந்திரமாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் படுத்த நிலையில் சிவன் காட்சி தருகிறார். இப்படி அவர் காட்சிதருவதற்கு பின் ஒரு அற்புத வரலாறு ஒளிந்துள்ளது. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

pallikondeswarar temple

சென்னையில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில், ஆந்திர மாநிலத்தில் உள்ளது சுருட்டப்பள்ளி என்ற ஊர். இந்த ஊரில் உள்ள பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயத்திலேயே உறங்கும் நிலையில் சிவன் காட்சி தருகிறார்.

Advertisement

வரலாறு:
தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைவதற்கு மந்திரமலையை மத்தாகவும், சிவன் கழுத்தில் உள்ள வாசுகி என்னும் பாம்பை கயிறாகவும் பயன்படுத்தினர். இதற்கு பலனாய் வாசுகி பாம்பிற்கு அமுதத்தில் சிறிதளவு தருவதாகவும் கூறினர்.

Surutapalli temple

தேவர்கள் ஒரு பக்கமும், அசுரர்கள் ஒருபக்கமும் வாசுகி பாம்பை கயிறுபோல இழுக்க, நீண்ட நேரம் கடைந்தமையால் வலி தாங்காமல் வாசுகி பாம்பு ஆலகால விஷத்தினைக் கக்கியது. இதனையடுத்து அந்த கொடிய விஷத்தில் இருந்து தங்களை காக்க தேவர்களும், அசுரர்களும் சிவனிடம் சென்று முறையிட அவர் அந்த விஷத்தை அருந்திவிடுகிறார்.

விஷத்தின் வீரியத்தால் அவருக்கு மயக்கம் ஏற்பட அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள சுருட்டப்பள்ளி என்ற ஊரில் ஓய்வெடுக்க நினைக்கிறார். பார்வதி தேவியார் மடியில் சிவன் படுத்திருக்க, விஷம் கழுத்தை தாண்டி இறங்கிவிடக்கூடாது என்பதற்காக பார்வதி தேவி கழுத்தை பிடித்துக்கொண்டிருக்கிறார்.

sivan

தேவர்களும், முனிவர்களும் சிவனை காண ஓடோடி வந்து அவர் எப்போது கண்விழிப்பார் என காத்துக்கொண்டிருக்க, நந்தி தேவரோ அவர்கள் அனைவரையும் அமைதிகாக்கும்படி வேண்டுகிறார்.

இந்த கோவிலில் பிரதோஷ பூஜை செய்தால் வறுமையின் பிடியில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

Advertisement