‘சிவன்’ படத்தை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று சொல்லுவதற்கு உண்மை பின்னணி என்ன? இந்த தவறை செய்தால் வீட்டில் தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படுமா?

pooja-room-sivan
- Advertisement -

இன்று பெரும்பாலான வீடுகளில் சிவபெருமானுடைய திருவுருவப்படம் இல்லாததை நாம் பார்த்திருப்போம். சிவபெருமான் உக்கிர தெய்வமும் இல்லை, சாந்த ஸ்வரூபமும் இல்லை. இரண்டும் கலந்த கலவையாக திகழ்கின்றார். பொதுவாக வீடுகளில் உக்கிரமாக உள்ள தெய்வங்களின் படத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்பது நியதி. உதாரணத்திற்கு காளி, காலபைரவர் போன்றவர்களின் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவார்கள். அதே வரிசையில் சிவபெருமான் படத்தை வீட்டில் வைத்திருப்பதும் கட்டாயம் கூடவே கூடாது என்று கூறுவார்கள். இதற்கு பின்னால் இருக்கும் அதிர வைக்கும் காரணம் என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sivan

சிவபெருமானுடைய தனிப்பட்ட திருவுருவத்தை தான் பூஜை அறையில் வைத்து வழிபட கூடாது என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் சிவனும், பார்வதியும் இணைந்து இருக்கும் படத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுவதில் எந்த ஒரு சாஸ்திர கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் கூறுவார்கள். ஒவ்வொரு கடவுள் படத்திற்கும் ஒவ்வொரு அதிர்வலைகள் உண்டு.

- Advertisement -

அது போல விக்ரகங்களுக்கு அதிகமான அதிர்வலைகள் உண்டாகும். அதனால் தான் விக்ரகங்கள் வீட்டில் வைத்திருந்தால் கட்டாயம் அதற்கு தினமும் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி அபிஷேகம் செய்ய உங்களால் முடியவில்லை என்றால் வீட்டில் தெய்வ சிலைகளை வைத்திருக்கக் கூடாது. உங்களுடைய உள்ளங்கை அளவிற்கு குறைவான உயரமுள்ள சிலைகளை தாராளமாக வைத்துக் கொள்ளலாம்.

sivaganga

ஆனால் அதை விட பெரிய சிலைகள் நீங்கள் வைத்திருக்கும் பொழுது கட்டாயம் அதற்குரிய பூஜை முறைகளையும் செய்ய வேண்டும். இல்லையென்றால் வீட்டில் உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகளும், இன்னல்களும் நிச்சயமாக ஏற்படும். தெய்வ சிலைகளுக்கு அதிக ஆற்றல் உள்ளது. அது போல சிவபெருமானுடைய சாதாரண திருவுருவப் படத்திற்கு பக்தனை பக்திக்குள் ஈர்க்க வைக்கும் ஈர்ப்பலைகள் உண்டு.

- Advertisement -

இந்த ஈர்ப்பலைகள் பக்தர்களுடைய மனதையும், எண்ண அலைகளையும் தொற்றிக் கொள்ளும். இதனால் இல்லற வாழ்வில் இருந்து முக்தி அடைவதற்கான மனநிலையை அவர்களுக்கு உண்டாக்கும். சிவனை பூஜிக்கும் பொழுது முக்திக்கான வழியை நோக்கி அவர்களை மனம் இழுத்துக் கொண்டு சென்று விடும் என்பதால் தான் சிவபெருமானுடைய திருவுருவப் படத்தை வீட்டில் வைத்திருக்க சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை.

sivan

அதற்கு பதிலாக சிவனும், பார்வதியும் தம்பதியாக இணைந்த கோலத்தில் இருக்கும் திருஉருவ படத்தை வீட்டில் வைத்திருப்பதால் நிறைய நன்மைகள் உண்டாகும். இதன் மூலம் சிவபெருமானையும் பூஜித்த திருப்தியும் உண்டாகும். சிவ, பார்வதியுடன் இருக்கும் படத்தை பூஜை அறையில் வைத்து தினமும் வழிபடுபவர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டாகுமாம். வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ளும் மனோதிடம் அவர்களுக்கு வரமாக கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே சிவபெருமானை தீவிரமாக வணங்குபவர்கள் சிவ பார்வதி படத்தை தாராளமாக வீட்டில் வைத்து வழிபடுங்கள்.

இதையும் படிக்கலாமே
சமையலறையில் உப்பை இந்த இடத்தில் மட்டும் வைக்கவே கூடாது. வீட்டில் கஷ்டம் உள்ளவர்கள் இந்த ஒரு மாற்றத்தை மட்டும் செய்து பாருங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -