சமையலறையில் உப்பை இந்த இடத்தில் மட்டும் வைக்கவே கூடாது. வீட்டில் கஷ்டம் உள்ளவர்கள் இந்த ஒரு மாற்றத்தை மட்டும் செய்து பாருங்கள்.

salt
- Advertisement -

உப்பை வைத்து பலவகையான பரிகாரங்கள், பல விதங்களில் சொல்லப்பட்டு இருந்தாலும், அந்த பரிகாரங்களை எல்லாம் செய்தும், சிலருக்கு வீட்டில் இருக்கும் கஷ்டம்  நீங்கவில்லை எனும் பட்சத்தில், இந்த ஒரு சிறிய மாற்றத்தையும் செய்து பார்க்கலாம் என்பதற்காக சொல்லப்பட்டுள்ள பரிகாரம் தான் இது. இப்படி செய்தால் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்று அர்த்தம் கிடையாது. வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டத்திற்கு சின்ன விடிவு காலம் பிறந்தாலும், அது நமக்கு நன்மை சேர்க்க கூடியதாக இருக்கும். கஷ்டம் இல்லாதவர்களுக்கு பிரச்சனை இல்லை. எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என்று சொல்லிவிட்டு வாழ்க்கையை நடத்தி செல்வார்கள்.

uppu jaadi

கஷ்டம் உள்ளவர்களுக்குத் தான் தெரியும், பரிகாரம் செய்வதன் மூலம் என்ன பலன் இருக்கிறது என்று! அந்த வரிசையில் உங்கள் வீட்டு சமையலறையில் நீங்கள் இப்படிப்பட்ட தவறுகளைச் செய்து வந்தால், அதை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டுள்ள பரிகாரமுறை தான் இது. நம்பிக்கை உள்ளவர்கள் செய்யலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் தாராளமாக இந்த பதிவை தொடர்ந்து படிக்க வேண்டும் என்று அவசியமே இல்லை.

- Advertisement -

மகாலட்சுமியின் அம்சம் என்று சொல்லப்படும் இந்த உப்பை கையாளும் போது பெண்கள் பொறுப்போடு கையாள வேண்டும். அலட்சியமாக உப்பை கையாளக் கூடாது. அதை எடுக்கும் போது கீழே கொட்டிவிடக் கூடாது என்ற எண்ணமும், பெண்களுக்கு மனதில் வரவேண்டும் என்பதற்காகத்தான் பீங்கான் ஜாடியில், கண்ணாடி ஜாடியில் இந்த உப்பைக் கொட்டி வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். இதோடு சேர்த்து பொறுப்புணர்வு என்பது பெண்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும் என்பதையும் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

salt2

அதுமட்டுமல்லாமல், உப்பிலிருந்து வெளியாகக் கூடிய ஈரத்தன்மை சில்வர் பாத்திரங்களில் கொட்டி வைத்தால், உடல் ஆரோக்கியத்திற்கு கேடு தரும் என்பது அறிவியல் ரீதியான உண்மை. இந்த உப்பை ஜாடியில், கண்ணாடி பாத்திரத்தில் நீங்கள் கொட்டி வைப்பதை விட, சிறிய அளவில் இருக்கும் மண் பானையை வாங்கி உப்பை நிரப்பி வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

- Advertisement -

நிலத்தில் இருந்து எடுக்கப்படும் மண், நீர் ஊற்றிப் பிசைந்து, காற்றிலும், ஆகாயத்தில் இருந்து வரும் வெளிச்சத்தில் காயவைத்து, நெருப்பினால் சுடப்பட்டு, பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் இந்த மண் பானையில் உப்பைக் கொட்டி வைப்பது நேர்மறை ஆற்றலை நம் வீட்டிற்குள் கொண்டு வந்து சேர்க்கும்.

salt cash

அதாவது பஞ்ச பூதங்களின் சக்தியும் அந்த மண் பானைக்குள் அடங்கும். இப்போதெல்லாம் விதவிதமாக மண்பானைகள் அழகாக நமக்கு கிடைக்கின்றது. அதில் ஒன்றை வாங்கி அது நிரம்ப கல் உப்பை கொட்டி சமையலறையில் மேடைக்குக் கீழே பக்கத்தில், அதாவது அடுப்பு வைத்திருக்கும் இடத்திற்குப் கீழ் பக்கத்தில் உப்பை வைப்பது நமக்கு பலவகையான நன்மைகளை கொடுக்கும்.

- Advertisement -

clay-pot

இந்த உப்பினை எந்த காரணத்தைக் கொண்டும் உங்களது தலைக்கு மேலே உள்ள அலமாரிகளில் வைக்கக்கூடாது. தலையை மேலே தூக்கி, கையை உயர்த்தி எடுக்கும் இடத்தில் உப்பை வைக்கக்கூடாது என்று அந்த காலத்தில் இருந்தே நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். தலைகுனிந்து உப்புக் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து உப்பை நம்முடைய சமையலறையில் பராமரித்து வந்தால் நிச்சயம் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டம் குறையும்.

clay-pot1

ஒவ்வொரு முறையும் குனிந்து குனிந்து உப்பை எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளவர்கள், உப்பு பானையிலிருந்து கொஞ்சமாக உப்பை எடுத்து ஒரு சிறிய பீங்கான் ஜாடியிலோ, கண்ணாடிக் கிண்ணத்திலோ போட்டு சமையலுக்கு பயன்படுத்தி விட்டு, மீதம் இருக்கும் உப்பை தினந்தோறும் எடுத்து உப்பு பாணியிலேயே கொட்டி வைத்துக்கொள்ளலாம். இதிலும் எந்த ஒரு தவறும் கிடையாது.

salt

உங்களுடைய வீட்டில் கஷ்டம் இருந்தால் நீங்கள் இந்த ஒரு சிறிய மாற்றத்தை கொண்டு வந்து பாருங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டம் ஏதாவது ஒரு வழியில் கொஞ்சம் குறையவதற்காவது, நிச்சயம் ஏதாவது ஒரு வழி, ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுக்கு கிடைக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
அரிப்பை உண்டாக்கும் சேற்றுப் புண்ணை அலட்சியம் செய்தால் ஆபத்து! வீட்டில் இருக்கும் 2 பொருளை வைத்து ஒரே நாளில் குணப்படுத்துவது எப்படி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -