சுடுகாட்டில் ஆடும் சிவன் என்று கேலி செய்வதற்கு பின் உள்ள உண்மை

0
3806
sivan
- விளம்பரம் -

சிலர் சிவனை சுடுகாட்டில் ஆடிக்கொண்டிருக்கும் பித்தன் என்று கேலி செய்வதை நாம் பார்த்திருப்போம். சிவ பக்தர்கள் சிலரால் இதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றாலும் மறுத்தும் பேச முடியாமல் தவிப்பர். ஏன் என்றால் அவர் சுடுகாட்டில் ஆடிக்கொண்டிருப்பவர் தான். ஆனால் அவர் சுடுகாட்டில் ஆடுவது மனிதப்பிறவிகளின் நலனுக்காக தான் என்பதை அறிய சிலர் மறந்துவிடுகின்றனர்.

sivan

பொதுவாகவே உடலும் உயிரும் சேர்ந்தால் தான் அதை உயிரினம் என்று அழைக்கிறோம். உடலை விட்டு உயிர் பிரிந்த அடுத்த நொடியே உடலை பிணமென்று தான் அழைப்பர்.

Advertisement

இந்த பிணத்தை இரண்டு நாட்களுக்கு மேல் யாரும் சீண்டக்கூட மாட்டார்கள். ஆனால் உடலை விட்டு பிரிந்த நம் உயிருக்கு அப்படி இல்லை. நம் உயிரானது நமது உடலை எப்போதும் நேசித்துக்கொண்டே தான் இருக்கும்.

sivan

நாம் ஒரு வீட்டில் ஒரு வருடம் குடி இருந்தால் கூட அந்த வீட்டை விட்டு வெளியேறும் போதும் நமது மனம் எப்படி பதை பதைக்கும். அதே பதைபதைப்பு தான் இறந்தவரின் ஆன்மாவிற்கும் அவரது உடலை எரிக்கவோ புதைக்கவோ செய்யும்போது இருக்கும்.

ஐயோ, இத்தனை வருடங்களாக நாம் பேணிக்காத்த நமது உடலை இப்படி எரிக்கிறார்களே என்று ஆன்மா பரிதவிக்கும்போது அந்த ஆன்மாவிற்கு ஆறுதல் அளித்து அடைக்கலம் தருவது அந்த பரமசிவன் தான்.

sivan

இதையும் பார்க்கலாமே:
சிவனுக்கு நடக்கும் வினோதமான திருநீறு அபிஷேகம் – வீடியோ

எங்கும் நிறைந்திருக்கும் அந்த பரஞ்சோதி நாம் இறந்த பிறகும் நம்மை காத்து ரட்சிக்க சுடுகாட்டிலும் இருக்கிறார். உயிரானது உடலை விட்டு பிறந்தாலும் நம்மை விட்டு எப்போதும் பிரியாது நம் ஆன்மாவை காத்து ரட்சிக்கும் அந்த ஈசனை இனியாவது கேலிசெய்வதை நிறுத்தி, நமக்கான அனைத்து நலன்களையும் புரியும் அவரை போற்றுவதே இந்த மானிட பிறப்பின் பாக்கியமாக கருதுவோம்.

Advertisement