குபேர யோகம் பெற்று பெரும் செல்வத்தை அடைய சிவனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

guberan sivan

சிவபெருமானை அடைவதற்கு சரணாகதி ஒன்றே வழியாகும். அவரை சரண் அடைபவர்கள் வாழ்வில் எல்லா நலன்களும், வளங்களும் வெற்றி இன்புற்றிருப்பர். சிவபெருமானை வழிபடுவதற்கு நிறைய சாஸ்திரங்கள் இருக்கின்றன. சிவாலயங்களில் வழிபடுவதற்கான முறைகளும் ஏராளமாக இருக்கின்றன. சிவன் நினைத்தால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். ஒருவரை ஒன்றும் இல்லாதவராக ஆக்கவும் முடியும். செல்வந்தராக மாற்றவும் முடியும். ஈசனை எப்படி வழிபடுவது என்பதைப் பற்றிய பதிவு தான் இது.

sivan-temple

சிவாலயங்களில் வணங்கும் பொழுது பலிபீடத்திற்கு அருகில் தான் வணங்க வேண்டும். நீங்கள் உங்களது வாழ்க்கையில் வெற்றி அடைய விரும்பினால், செல்வந்தராக நினைத்தால் நிச்சயம் சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் அவசியம் செய்ய வேண்டும். சிவாலயத்தில் கால் நீட்டி உட்காரக்கூடாது. அதிலும் வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் இவற்றை செய்யக்கூடாது. மேலும் இருகரம் குவித்து தலைமேல் வைத்து வணங்குவது நல்லது.

சன்னிதி கிழக்கு நோக்கி இருந்தால் பலிபீடத்திற்கு தென்கிழக்கு மூலையில் நமஸ்கரித்து கொள்ள வேண்டும். தெற்கு மற்றும் மேற்கு நோக்கிய சந்நிதி இருந்தால் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் நமஸ்கரித்து கொள்ள வேண்டும். சன்னிதி வடக்கு நோக்கி இருந்தால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் நமஸ்கரித்து கொள்ள வேண்டும். கிரகணத்தின் போதும், பிரதோஷ தினங்களிலும் சிவாலய வழிபாடு நல்ல பலன்களை தரும்.

kodimaram

சிவாலயங்களில் கொடிமரத்திற்கு அருகில் நின்று மூன்று முறை வணங்க வேண்டும். அதுபோல் மூன்று முறை வலம் வர வேண்டும். வலம் வரும்பொழுது கொடி மரத்தையும் சேர்த்து வலம் வர வேண்டும். ஆலயத்திற்குள் இருக்கும் மற்ற சன்னதிகளில் விழுந்து வணங்க கூடாது.

- Advertisement -

அடி பிரதட்சணம் செய்யும் பொழுது பொறுமையுடன் செய்ய வேண்டும். எவரிடமும் பேசிக்கொண்டே செய்யக்கூடாது. அடி பிரதட்சணம் செய்யும் பொழுது நிலம் பார்க்க பொறுமையுடன் செய்ய வேண்டும். பூமி அதிர நடக்கக் கூடாது. உட்பிரகாரத்தில் பிரதட்சணம் செய்வதைவிட வெளிப்பிரகாரத்தில் செய்யும் பிரதட்சணம் அதிக பலன் தரும். வெளிப்புறப் பிரகாரத்தில் கொடி மரத்தையும் சேர்த்து பிரதட்சணம் செய்ய வேண்டும்.

DEEPAM2

ஆலயத்தில் அபிஷேகம் நடைபெறும் சமயத்தில் எந்த பிரதட்சணமும் செய்யக்கூடாது. ஆலயத்திற்குள் இறைவனை அன்றி பிறரை வணங்கக்கூடாது. அபிஷேகம் நடைபெறும் சமயத்தில் அபிஷேகத்தை தவிர வேறு எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. வெளியேறும் பொழுது கொடிமரம் அருகில் ஒருமுறை நமஸ்கரித்து விட வேண்டும். சிவானந்தலஹரி என்னும் நூல் பார்வதி தேவியுடன் இருக்கும் சிவபெருமானை வழிபடுகிறவர்கள் பிறவிப்பயன் அடைவார்கள் என்கிறது. நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் நினைத்ததெல்லாம் நடக்கும். ஆரோக்கியத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். இலுப்பை எண்ணெய் காரிய சித்தி ஆகும். செல்வம் பெருகும். தேங்காய் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் வாழ்வில் சங்கடங்கள் தீரும்.

உட்பிரகாரத்தில் வழிபடும் பொழுது வலது பக்கம் நின்று வழிபட வேண்டும். பங்குனி உத்திரம் தினத்தன்று சிவனை வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும். சிவனுக்கு உரிய மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்தால் செல்வவளம் மிகுதியாகும். ஈசன் விரும்பும் எருக்கம் பூ, அருகம்புல், திருநீரு, ஊமத்தை போன்றவற்றை அளிப்பதால் குபேர யோகம் கிடைக்கப்பெறும்.

திருமணம் ஆகி குழந்தை இல்லாத தம்பதியர்கள் வியாழக்கிழமை அன்று மாலை ஐந்து முதல் ஏலு மணிக்குள்ளாக சிவாலயம் சென்று தட்சிணாமூர்த்தி அஷ்டகம் ஒன்பது முறை வாசிப்பதால் நல்லது நடக்கும். உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் காக்கும் பொருட்டு சிவ மேனியில் சந்தனத்துடன் கஸ்தூரி மஞ்சள், கோரோசனை, குங்குமப்பூ மற்றும் பச்சை கற்பூரம் ஆகியவற்றை கலந்து காப்பு அணிவிக்கிறார்கள். இக்கோலத்தை தரிசிப்பவர்களுக்கு கோடி வருடம் சிவலோக பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பல்வேறு புஷ்பங்கள் மற்றும் நீர்கொண்டு ஈசனை வழிபடுவதால் மன அமைதி கிடைக்கும். மன இறுக்கம் தளர்ந்து விடும். சிவாலய திருப்பணிகளில் உங்களால் முடிந்த உதவிகளை செய்வதன் மூலம் உங்கள் சந்ததியினரே வளமாக வாழ்வார்கள். சிவன் சொத்திற்கு ஆசைப்படுபவர்களின் குலம் மொத்தமாக நாசம் அடைவது போல் நீங்கள் செய்யும் சிறு உதவியும் குலம் தழைக்க உதவும்.

Snake pooja

சிவனுக்கு சாற்றிய வில்வத்தை ஒரு மாத காலத்திற்கு நீரில் கழுவிவிட்டு மீண்டும் உபயோகம் செய்யலாம். சதபத்ரம், தாமரை, வில்வம் இவற்றால் அர்ச்சனை செய்பவர்களுக்கு பெரும் செல்வம் கிட்டும். ஜாதி மலர், அரளி, அத்தி, முல்லை, நீலோத்பவம் இவைகளால் அர்ச்சனை செய்பவர்களுக்கு சகல வளங்களும் நிறைந்து காணப்படும். ஒரே ஒரு கொன்றை மலரை ஈசனுக்கு சாத்துபவர்களுக்கு பெறற்க்கரிய பாக்கியங்கள் கிட்டும். சகல தோஷங்களும் நீங்க வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். வில்வ அர்ச்சனை செய்யும் பொழுது அந்த இலையின் பின்பக்க நரம்பு இறைவனின் திருமேனி மீது படும்படி செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே
கணவருக்கும், மனைவிக்கும் சதாகாலமும் பிரச்சினையா? இந்தக் கணவன் மனைவி வாழ்ந்த வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிதான் பாருங்களேன்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sivan koil. Sivan valipadu murai Tamil. Sivan kovil vazhipadu. Sivan temple.